கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குள்ளணூர் பகுதியில் பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவரை, அவருடன் கள்ளக்காதல் உறவில் இருந்த கார் ஓட்டுநர் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டியதால், அப்பெண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குள்ளணூர் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா (48). இவர் அப்பகுதியில் ‘லட்சுமி ஹைடெக்’ என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கணவர் துரைராஜ் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சமூக வலைதளம் மூலம் அறிமுகமான உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாரி கிருஷ்ணன் என்பவருடன் பிள்ளைகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்தது.
வெண்ணிலாவின் பியூட்டி பார்லரில் ராசி நகர் பகுதியைச் சேர்ந்த சம்ரா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சம்ரா மூலம், அவரது கணவர் சிராஜ்தினுக்கு (ஓட்டுநர்) வேலை வேண்டுமென்று கேட்கவே, வெண்ணிலா அவரை தனது காருக்கு ஓட்டுநராக வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். அவருக்காக ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துத் தங்குவதற்கு உதவியுள்ளார்.
பியூட்டி பார்லர் சம்பந்தமாக பல பகுதிகளுக்கு சிராஜ்தினுடன் வெண்ணிலா மட்டும் பயணம் செய்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று மது அருந்துவது, தனிமையில் உல்லாசமாக இருப்பதுமாக இருந்துள்ளனர். இந்தக் காட்சிகளை சிராஜ்தின் வெண்ணிலாவுக்கு தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
வெண்ணிலா இரண்டாவது திருமணம் செய்த பிறகு, சிராஜ்தினுடன் இருந்த பழக்கத்தை குறைத்துக் கொண்டு, அவரை ஓட்டுநர் வேலையை மட்டும் பார்க்குமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சிராஜ்தின், வெண்ணிலாவை மிரட்டுவதற்காக, அவருடன் தனிமையில் இருந்த வீடியோக்களை பியூட்டி பார்லரில் வேலை செய்யும் ஊழியர் உஷாவிடம் காட்டி, வெண்ணிலாவின் கேரக்டர் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
இந்த தகவலை உஷா, உரிமையாளரான வெண்ணிலாவிடம் சொல்லவே, அவர் உடனடியாக சிராஜ்தினையும், அவரது மனைவியையும் வேலையை விட்டு நீக்கி அனுப்பியுள்ளார். னால், சில நாட்கள் கழித்து வெண்ணிலாவுக்குப் போன் செய்த சிராஜ்தின், தன்னிடம் உள்ள அந்தரங்க வீடியோக்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன வெண்ணிலா, சிராஜ்தினிடம் பேரம் பேச முயன்றும் பலனில்லை. வேறு வழியில்லாமல், கடந்த 4ஆம் தேதி காலையில், வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த தகவல் அறிந்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, சிராஜ்தினிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : கொலையை விபத்தாக மாற்றுவது எப்படி..? மாமியாரை எரித்து சாம்பலாக்கிய மருமகள்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!



