டிட்வா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் அலுவலகம் செல்வோரும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்..
இந்த நிலையில் இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தமிழக அரசை சாடி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை.
மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : ”இளையராஜாவுக்கு உரிமை உள்ளது..” குட் பேட் அக்லி வழக்கில் தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!



