“நான் உயிர் பிழைக்க காரணமே என் மனைவி, மகள் தான்”.!! உருக்கமாக பேசிய நடிகர் ரோபோ சங்கர்..!!

Robo Sankar 2025 1

தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் துடிப்பான உடல்மொழியால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் ரோபோ சங்கர், தனது 46-வது வயதில் காலமானார்.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற ரோபோ சங்கர், ஒரு நடிகர், ஸ்டாண்ட்-அப் காமெடியன் மற்றும் நடன கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதில் ரோபோ போல வேடமிட்டு வந்ததால், ‘ரோபோ சங்கர்’ என்றே அழைக்கப்பட்டார்.

தனுஷின் ‘மாரி’ திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பிறகு, ‘புலி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். வெற்றிகரமான திரைப்பயணம் இருந்தபோதிலும், ரோபோ சங்கரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சவால்களைக் கண்டது.

கடந்த ஆண்டு அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, உடல் எடை வெகுவாக குறைந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், “நான் மீண்டும் உயிர் பிழைத்ததற்கு முக்கிய காரணம் என் மனைவிதான். அவரும் என் மகளும் இல்லை என்றால் நான் இல்லை” என்று உருக்கமாகப் பேசியது பலரையும் நெகிழ வைத்தது.

தனது மகளுக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து வைத்தபோது, சிலர் அதை விமர்சித்தாலும், தனது ஒரே மகளுக்காக மொத்த வருமானத்தையும் செலவு செய்து, திருமணத்தை நடத்தி அழகுபார்த்திருக்கிறார் ரோபோ சங்கர் எனப் பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது.

அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து, கோமா நிலைக்குச் சென்ற அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்திய ஒரு கலைஞனின் வாழ்க்கையின் இறுதிப் பக்கம், பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

Read More : நம் முன்னோர்களின் சாபம், தோஷங்களை நீக்கும் எளிய பரிகாரம்..!! இன்னும் 3 நாள் தான் இருக்கு..!! உடனே இதை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

கவனம்..! தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைய செப்.30-ம் தேதி கடைசி நாள்...! முழு விவரம்

Fri Sep 19 , 2025
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய […]
pension 2025

You May Like