சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. இந்த படம் முதலில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது..
இந்த நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி உள்ளது.. அதன்படி இந்த படம் வரும் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது..
ஜனவரி 9-ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக உள்ள நிலையில் பராசக்தி படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.. இதன் மூலம் இந்த முறை ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் நேரடியாக மோதுகிறது.. எனினும் பாக்ஸ் ஆஃபிஸில் ஜனநாயகன் படத்திற்கு பராசக்தி டஃப் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27-ம் தேதி மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. ஹெச்.வினோத் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்..
Read More : பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.. விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் சொன்ன வார்த்தை..!



