நம் பரம்பரையில் நாகதோஷம் என்பது ஒரு முக்கியமான ஜோதிட சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இதனை தீர்க்க பலர் கோவில்களில் பால், மஞ்சள் போன்றவற்றைக் கொண்டு நாக பாம்புகளின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதைக் காணலாம். குறிப்பாக, அரச மரத்தடியில் பல நாகர் சிலைகள், இந்த வழிபாட்டின் பாரம்பரிய அடையாளமாக விளங்குகின்றன.
ஆனால், நாகதோஷம் நிரந்தரமாக விலக ஒரு தனிப்பட்ட பரிகார முறையைப் பரிந்துரைத்தவர் போகர் சித்தர். புகழ்பெற்ற சித்தர்களில் ஒருவரான போகர், தனது “போகர் 12000” எனும் பிரபல நூலில், நாகதோஷம் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் தங்களுக்கு நேரும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஒரு விசேஷ வழிபாட்டு முறையை விவரித்துள்ளார்.
போகர் பரிகாரம் :
நாகதோஷ நிவாரணத்திற்கு ஏற்ற சிறந்த நாளாக ஆடிமாத வளர்பிறை சதுர்த்தி, நாக சதுர்த்தி திதி எனப்படுகிறது. இந்தத் தினமே போகர் சித்தர் பரிகாரத்திற்காக சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாளன்று, ஒரு அரச மரத்தின் அடியில், நாகயந்திரத்துடன் கூடிய ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும்.
அதன் மேல், சிவலிங்கத்தைத் தாங்கிய நாக சிலை கருங்கல்லால் செய்யப்பட்டு, சரியான அளவிலும் வடிவத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். போகர் கூறும் சிலையின் உயரம் பீடம் சேர்த்து 2.5 அடி இருக்க வேண்டும். மேலும், நாகத்தின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுகளாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள் :
இந்த பரிகாரத்தைச் செய்யும் நாளில், பக்தர்கள் பால் மற்றும் பழம் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டு சுத்தமும், பக்தியும் நிறைந்த மனநிலையுடன் விரதமிருந்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் நாகதோஷம் காரணமாக ஏற்படும் தடை, துன்பங்கள் மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படும் இடையூறுகள் நீங்கி, அமைதி மற்றும் செழிப்புடன் வாழலாம் என போகர் சித்தர் வலியுறுத்துகிறார்.
Read More : தப்பித் தவறி இந்த வாஸ்துப்படி மட்டும் வீடு கட்டாதீங்க..!! நினைத்துப் பார்க்க முடியாத சிக்கல்கள் வரும்..!!