இன்று மதுராந்தகத்தில் நடந்த என்.டி.ஏ கூட்டணி மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக சாடினார். மேலும் “ இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி திமுக அரசை கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை.. வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த திமுக அது எதையும் நிறைவேற்றவில்லை..
தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.. தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.. இதை குழந்தை கூட அறியும்.. ஊழல் நிறைந்த திமுக ஆட்சி ஜனநாநாயகத்திற்கு எதிரான் ஆட்சி.. திமுக அரசு 4 வழிகளில் செயல்படுகிறது.. குடும்ப ஆட்சி, ஊழல் பாதை, பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடி திமுக வளர்கிறது.
தமிழ்நாட்டிற்கு இரட்டை எஞ்சின் ஆட்சி தேவை. ஜெயலலிதா குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றினார்.. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு.. இங்குள்ள பெண்கள் என்.டி.ஏ ஆட்சியை அமைத்து தந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்..” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் #தமிழ்நாடு_தலைகுனியாது!” என்று குறிப்பிட்டுள்ளார்..



