நகை வாங்க சரியான நேரம்.. தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்துள்ளது?

Gold new rate

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.74,240க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் ரூ.2000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது.. ஆனால் இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை குறைந்தது.. கடந்த 3 நாட்களில் ரூ.1200-க்கு மேல் விலை குறைந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.9,280-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.74,240 விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : வெறும் ரூ.411 முதலீடு செய்தால் ரூ.43.60 லட்சம் கிடைக்கும்.. வட்டியை வாரி வழங்கும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!!

RUPA

Next Post

முதல்முறை வேலைப்பெறும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை.. இன்று முதல் அமல்..!!

Fri Aug 15 , 2025
Rs. 15,000 incentive for youth getting jobs for the first time..effective from today..!!
Pradhan Mantri Vikasit Bharat Rojgar Yojana 1

You May Like