திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இந்த நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞ்சர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழிக்கு பிறந்த்நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்..
Read More : புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரித்தொகையா..? வெளியான பரபரப்பு தகவல்..!!



