“வாழவே புடிக்கல.. இவங்க எல்லாரும் தான் காரணம்” கடைசியாக அக்காவுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்..!! பரபரத்த திருவண்ணாமலை

voice msg 1

காதலன் பேசாததால் மனம் உடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. அவரது மகள் வைஷாலி, (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே வீட்டருகில் வசிக்கும் ராஜ், (20); என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு ராஜ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ராஜ் வைஷாலியுடன் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு முன்பு சிறுமி தனது சகோதரிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் அம்மாவ பத்திரமா பாத்துக்கோ, உங்க கிட்ட எல்லாம் சொல்லாம போறேன் மன்னிச்சுக்கோங்க, என் சாவுக்கு அவங்க அம்மா, அக்கா, அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம். என்னால தான் உனக்கும் அம்மாவுக்கும் இவ்ளோ அசிங்கம். நான் சாகப் போறேன். எனக்கு இருக்கவே புடிக்கல. இருக்கக் கூடாது இப்பவே செத்துடனும்னு தோணுது. என் சாவுக்கு அவங்க குடும்பம் மட்டும் தான் அக்கா காரணம் என்று கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: பாஜகவை கழட்டி விட தயாராகுதா அதிமுக..? விஜய், சீமானுக்கு சிக்னல்..!! எடப்பாடி பழனிச்சாமியின் பலே ப்ளான்

Next Post

கவனம்.. தயிருடன் இவற்றை கலந்து சாப்பிடுகிறீர்களா? அவ்வளவு தான்!

Mon Jul 21 , 2025
Ayurvedic experts say that eating yogurt with certain ingredients can cause health problems.
curd 4 1 1751278186661

You May Like