உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கைகளை அறிவித்து வருவது, தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் ஒருவித எச்சரிக்கை நிலவுவதை உணர்த்துகிறது. நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன. டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
பணிநீக்கங்களை மேற்கொள்ளும் டாப் நிறுவனங்கள் :
டிசிஎஸ் (TCS): டாடா குழுமத்தின் ஐடி பிரிவான டிசிஎஸ், உலகளவில் தங்கள் மொத்த ஊழியர்களில் 1% ஆன 6,000 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளதோடு, மேலும் 6,000 பேரைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப, நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக மொத்தம் 12,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நெஸ்லே SA: உலகப் புகழ்பெற்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே SA, தனது மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 6% ஆக இருக்கும் 16,000 பேரைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அமேசான்: உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், மனித வளங்கள் மற்றும் நுகர்வோர் வணிகம் போன்ற முக்கியத் துறைகளில் சுமார் 15% பணியிடங்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளது.
கூகுள்: இந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனம், வடிவமைப்பு சார்ந்த துறைகளில் இருந்து சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசென்ச்சர்: செப்டம்பர் 2025-ல் அசென்ச்சர் நிறுவனம் தனது மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 11,000-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
சேல்ஸ்ஃபோர்ஸ்: AI கருவிகளின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சேல்ஸ்ஃபோர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோஃப், 4,000 வாடிக்கையாளர் ஆதரவு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். இதன் மூலம் வாடிக்கையாளர் ஆதரவுப் பிரிவின் ஊழியர்களின் எண்ணிக்கை 9,000-லிருந்து 5,000 ஆகக் குறைந்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்: 2025 ஆம் ஆண்டில், மைக்ரோசாஃப்ட் 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களையும், ‘குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்’ எனக் கருதப்பட்ட 2,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது. தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா, இந்த மறுசீரமைப்பு நிறுவனத்தின் ‘சந்தை செயல்திறன், மூலோபாய நிலைப்பாடு மற்றும் வளர்ச்சி’ ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்
Read More : கொழுந்தனாரின் ஆணுறுப்பை அறுத்து தூக்கி வீசிய அண்ணி..!! விசாரணையில் திடுக்கிட வைக்கும் காரணம்..!!



