எமதர்மன் அனுமதியுடன் பூமிக்கு வரும் முன்னோர்களின் ஆன்மாக்கள்..!! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!

Yema Dharman 2025

மகா+ஆலயம் என்பதே மகாளயம். அதாவது, முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த 16 நாட்களில் எமதர்மனின் அனுமதியோடு, நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் நமது சந்ததியினர் தங்களை நினைக்கிறார்களா, நீர் மற்றும் உணவு வழங்குவார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள். அவர்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்கும் வகையில், நாம் தானங்கள் செய்வது மிகவும் அவசியம்.


இந்த ஆண்டுக்கான மகாளய பட்சம் செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கியது. அடுத்து வரும் 16 நாட்களும் பொதுவாக அசுபமானதாகக் கருதப்பட்டு, மக்கள் எந்த ஒரு புதிய பொருளையும் வாங்க மாட்டார்கள். இருப்பினும், புதிய ஆடைகளை மட்டும் வாங்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால், 6 பொருட்களை மட்டும் கட்டாயம் வாங்கலாம். அவ்வாறு வாங்குவதால், எந்த தோஷமும் ஏற்படாது, முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து ஆசிகளை வழங்குவார்கள் என ஜோதிடம் கூறுகிறது.

மகாளய பட்சத்தில் வாங்க வேண்டிய 6 பொருட்கள் :

கருப்பு எள்: முன்னோர்களுக்குச் செய்யப்படும் தர்ப்பணங்களில் கருப்பு எள் மிகவும் முக்கியமானது. விஷ்ணுவுக்குப் பிடித்தமான இந்த எள்ளை தானம் செய்வதால், முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, சந்ததியினர் மகிழ்ச்சியாக வாழ அருள் புரிவார்கள்.

அரிசி: தர்ப்பணம் செய்ய அரிசியும் பயன்படுத்தப்படுகிறது. அரிசி வெள்ளியைப் போன்று புனிதமானதாகக் கருதப்படுகிறது. முன்னோர்களை தியானித்த பிறகு அரிசியை தானம் செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.

பார்லி: பார்லி, பூமியில் முதலில் விளைந்த தானியமாகக் கருதப்படுகிறது. மத ரீதியாக இது தங்கத்திற்குச் சமமானது. மகாளய பட்ச காலத்தில் பார்லி வாங்கி தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

எண்ணெய்: மகாளய பட்சத்தின்போது முன்னோர்களுக்கு எண்ணெய்யால் அர்ச்சனை செய்வது சிறந்தது. எண்ணெய் வாங்கி தானம் செய்தால் உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.

புது வஸ்திர தானம்: மகாளய பட்ச நாட்களில் தனக்காகப் புதிய ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து, மற்றவர்களுக்குப் புதிய ஆடைகளை தானமாக அளிக்கலாம். முன்னோர்களுக்குப் புதிய வஸ்திரம் வாங்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. அவ்வாறு வாங்கி, முன்னோர்களை நினைத்து பிராமணர்களுக்கு தானம் அளிப்பதன் மூலம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.

வெள்ளைப் பூக்கள்: முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வெள்ளைப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அமைதி மற்றும் எளிமையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மகாளய பட்சத்தில் வெள்ளைப் பூக்களை வாங்கிப் பயன்படுத்தினால், முன்னோர்கள் மகிழ்ந்து அருள் புரிவார்கள்.

Read More : நவராத்திரி சிறப்பு பூஜை..!! வீடுகளில் கலசம், கொலு வைத்து வழிபட உகந்த நேரம் எது..?

CHELLA

Next Post

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 4 பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்...! இபிஎஸ் அதிரடி நடவடிக்கை...!

Wed Sep 10 , 2025
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் நான்கு பேரை கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க […]
admk 2025

You May Like