மகாராஷ்டிர மாநிலம் போர்ஜூனி என்ற ஊரில் கடந்த ஆண்டு திருமணமான சஞ்சீவானி என்ற இளம்பெண், தன் கணவருடன் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, லகான் பண்டாரே என்ற இருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ரூம் எடுத்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலன் நேரில் சென்று அந்த பெண்ணை வீட்டிலேயே சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனை, அந்த இளம்பெண்ணின் மாமியார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது மருமகளையும், அவளுடைய கள்ளக்காதலனையும் மாமியார் கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர், உடனே இந்த சம்பவத்தை இளம்பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் அவசரமாக வந்த பெண்ணின் தந்தை, தாத்தா மற்றும் மற்றொருவரான குடும்ப உறவினர் கடும் கோபம் அடைந்தனர்.
பின்னர், இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்று, வழியில் மிரட்டல்களும் தாக்குதல்களும் நடந்து, இறுதியில் அவர்களது கை, கால்களை கட்டி விட்டு அருகிலிருந்த ஒரு கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்தனர். பின்னர், தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த இரண்டு சடலங்களை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபின் இது கொலை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் கைது செய்த போலீசார், இந்தக் கொடூரம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Read More : இனி அரிசி சாதம் வைக்க குக்கர் யூஸ் பண்ணாதீங்க..!! பாத்திரத்தில் சமைப்பதால் இத்தனை நன்மைகளா..?