ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பாலிஹர்சந்தி கோயிலில், காதலன் கண் முன்னே காதலி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. கோயிலுக்குச் சென்ற ஒரு மாணவியும் அவரது காதலனும், அருகில் அமர்ந்திருந்தபோது ஒரு கும்பல் அவர்களை நெருங்கியது.
அந்த கும்பல், இருவரையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளது. ஆனால், காதலர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், காதலனை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த கும்பலில் இருந்த இரண்டு பேர், மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, 3 குற்றவாளிகளை கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியையும் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், சுற்றுலாத் தலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



