சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கின்றனர்.. மேலும் துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.. பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.. மேலும் சிவகார்த்திகேயன், சிவகுமார், மிஷ்கின் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டங்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்த மழலைகள், இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு அப்பா நன்றி என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்..
மேலும் நான் முதல்வன் திட்டம் குறித்து இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்தார்.. கல்லூரியில் எந்த படிப்படை தேர்வு செய்ய வேண்டும், வேலைவாய்ப்புக்கு எப்படி தயாராக வேண்டும், மொழிப்புலமையை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என அனைத்து உதவிகளையும் நான் முதல்வன் திட்டத்தில் பெற முடியும் என்று அவர் கூறினார்.. மேலும் இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.. வெளிநாடுகளில் கூட வேலைவாய்ப்புகளை பெற்று வருவதாகவும் கூறினார்..
நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த தென்காசியை சேர்ந்த பிரேமா என்ற மாணவி ஒருவர் உணர்வுப்பூர்வமாக தனது நன்றியை தெரிவித்தார்.. அப்போது பேசிய அவர் “ நான் முதல்வன் திட்டத்தால் தற்போது நான் செமி கண்டக்டர் தொடர்பான ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.. என் அப்பா என்னை படிக்க வைத்த போது பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டனர்.. ஆனால் என் பிள்ளை சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று என்னை படிக்க வைத்தார்.. பெண் பிள்ளைகள் படித்தால் என்ன நடக்கும் என்பதற்கு நான் தான் சாட்சி.. நான் முதல்வன் திட்டம் இல்லை என்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது.. என் முதல் மாத சம்பளத்தை என் அப்பா கையில் கொடுக்க வேண்டும்.. என்று கொண்டு வந்திருக்கிறேன்..” என்று நெகிழ்ச்சி உடன் பேசினார். மேடைக்கு வந்த தனது தந்தையிடம் தனது முதல் மாத சம்பளத்தை கொடுத்த அந்த மாணவி என் அப்பா இனி எதற்கும் கவலைப்படக் கூடாது..” என்று கூறினார்.. இந்த மாணவியின் பேச்சு அரங்கில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.