Flash : திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி.. தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம்..!

thiruparangunram madurai hc 1

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன..


இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு தாரர் தரப்பு என அனைத்து வாதங்களும் முன் வைக்கப்பட்டது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. எழுத்துப்பூர்வ வாதங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் “ திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை. தீபம் ஏற்றினால் அமைதி குலைந்துவிடும் என்பது தவறான வாதம்.. பொது அமைதி பாதிக்கப்படும் என அரசு கூறுவது யூகத்தின் அடிப்படையிலானது.. தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது.. அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளனர்., தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்..

மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

Read More : Flash : ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்த வெள்ளி விலை; தங்கம் விலையும் தடாலடி உயர்வு; அதிர்ச்சியில் மக்கள்..!

RUPA

Next Post

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! பொங்கல் பரிசு ரூ.3,000; வெளியான புதிய அறிவிப்பு..!

Tue Jan 6 , 2026
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
pongal gift stalin

You May Like