குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டு காலியாக உள்ள துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதில் குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுகள் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும். இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
Read more: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்..? – விரைவில் வெளியாகும் அறிவிப்பு