நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா ஆண்டுவிழா நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுள்ளார்.. இந்த விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா, கூடலூர் அதிமுக எம்.எல்.ஏ பொன்.ஜெயல்சீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி “ அறிவார்ந்த குடிமக்களை உருவாக்குவதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.. எனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் நான் பல மாணவிகளிடம் என்னவாக போகிறீர்கள் என்று கேட்டுள்ளேன்.. டாக்டர், பைலட், விமானப்படையில் சேரப் போகிறோம் என்று கூறுவார்கள்.. அரசியல்வாதியாக போகிறோம் என்று யாரும் கூறமாட்டார்கள்.. ஆனால் மாணவ, மாணவிகள் அரசியலுக்கு வர வேண்டும்..
இங்குள்ள அனைத்து குழந்தைகளும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்யுங்கள்..” என்று தெரிவித்தார்..
மழையில் நனைந்தபடியே மாணவ, மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடினார்.. அப்போது ஒரு மாணவனிடம் என்ன சவாலாக இருக்கிறது என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.. அதற்கு அந்த மாணவன் மழை என்று பதில் கூறியதால் ராகுல்காந்தி சிரித்தார்.
தொடர்ந்து மற்றொரு மாணவியிடம் பேசிய ராகுல் காந்தி “ பள்ளியில் நான் கீழ்ப்படிதல் உள்ள மானவனாக ஒருபோதும் இருந்ததில்லை.. ஆசிரியர்கள் என்னை கையாள்வதற்கு சிரமப்பட்டனர்.. ஏனெனில் நான் எப்போதும் கேள்விக் கேட்டுக் கொண்டே இருப்பேன்..” என்று தெரிவித்தார்..



