திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமையும் துணைக்கோள் நகரத்தில் 25 ஏக்கர் பரப்பில் 4வது புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணி, 336 கோடி செலவில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி கட்டுமான பணிகள் நடைப்பெறுவதாகவும், கட்டுமான பொருட்கள் திருடு போவதாகவும் வந்த தகவலையடுத்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த நபர் தடுத்து இருக்கிறார். மேலும் கேள்வி கெட்டவர்களை ஒருமையில் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அங்கு வந்த அரசு அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் முறையிட்டனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த நபருடன் அந்த அரசு அதிகாரியும் சேர்ந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியிருக்கின்றனர்.. மேலும் உங்களை தொலைத்து விடுவேன் என்று செய்தியாளர்களை மிரட்டியம் உள்ளார். செய்தியாளர்களை மிரட்டும் அரசு அதிகாரியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.