கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகளை மாமனார் நேரில் பார்த்த நிலையில், ஊரே ஒன்று கூடி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண் ஒருவர், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, பேஸ்புக் மூலம் சோஹில் என்ற ஓவியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 குழந்தைகளின் தாயான அந்தப் பெண், சோஹிலை தனது வீட்டுக்கு அழைத்து, குழந்தைகளை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, உல்லாசமாக இருந்துள்ளார்.
இரவு நேரத்தில், இருவரின் நடவடிக்கைகளை கண்டறிந்த அந்தப் பெண்ணின் மாமனார், அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அப்போது, கோபமடைந்த மக்கள், கள்ளக்காதலன் சோஹிலை கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கினர். பின்னர், போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பெரும் போராட்டத்திற்குப் பிறகு சோஹிலை மீட்டுள்ளனர்.
சோஹிலின் செல்போனில், அந்தப் பெண்ணின் ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்ட போலீசார், மாமனார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், அந்தப் பெண், சோஹிலுடன் எந்தவிதமான காதல் உறவும் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், போலீசார் சோஹிலைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.