திருமணம் என்பது வெறும் இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல, அது இரு வேறு விதமான கிரக நிலைகளின் இணைப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சிலருக்குத் திருமணத்திற்கு முன்பாக உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமலும், தொழிலில் தேக்க நிலையும் நீடிக்கலாம். ஆனால், இல்லற வாழ்வில் நுழைந்தவுடன் அவர்களின் ஜாதகக் கட்டத்தில் உள்ள யோகங்கள் செயல்படத் தொடங்கி, வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். அத்தகைய ‘கல்யாண யோகம்’ மற்றும் திருமணத்திற்குப் பின் அமோக வளர்ச்சியைப் பெறப்போகும் அதிர்ஷ்டக்கார ராசிகளைப் பற்றி இங்கே காண்போம்.
ரிஷபம் :
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனைகள் அரங்கேறுகின்றன. குறிப்பாக, தொழில் மற்றும் உத்தியோக ரீதியாக பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த வாய்ப்புகள் இவர்களை தேடி வரும். இவர்களது ராசிக்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் என்பதால், துணையின் வருகைக்குப் பின் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய உயரங்களை தொடும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிட்டும். வசதியான வாழ்க்கை மற்றும் செல்வ செழிப்பு ஆகியவற்றிற்கு திருமணமே இவர்களுக்கு ஒரு திறவுகோலாக அமைகிறது.
கடகம் :
கடக ராசியினரைப் பொறுத்தவரை, திருமணத்திற்குப் பின்பே தங்களின் திறமைக்கான உண்மையான அங்கீகாரத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக இவர்கள் எதிர்பார்த்துத் தவம் இருந்த வெற்றிகள், துணையின் தூண்டுதலாலும் ஊக்கத்தினாலும் மிக எளிதாக கைகூடும். திருமணத்திற்குப் பிறகு உயர்கல்வியை தொடர்வது, அரசாங்க வேலைகளில் அமர்வது அல்லது சொந்தமாக பெரிய தொழில் தொடங்குவது போன்ற பாக்கியங்கள் இவர்களுக்கு கிடைக்கும். இவர்களது வெற்றியின் பின்னணியில் துணையின் அதிர்ஷ்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
கன்னி :
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணமானது ‘அதிர்ஷ்ட தேவதை’ வீட்டிற்குள் நுழைவதற்கு சமம். இவர்களது வாழ்க்கைத்துணை வந்த பிறகு, தொழில் மற்றும் வியாபார ரீதியாக கோடீஸ்வர யோகத்தை பெறும் அளவுக்கு கிரக நிலைகள் சாதகமாக மாறும். சொந்தமாக வீடு, சொகுசு வாகனம் போன்ற சொத்துக்களை திருமணத்திற்குப் பிறகு மிக குறுகிய காலத்திலேயே இவர்கள் வாங்கிவிடுவார்கள். துணையின் ஆலோசனைகளும், அவர்களின் அதிர்ஷ்டமும் கன்னி ராசியினரை வியாபாரத்தில் ஒரு வெற்றிகரமான மனிதராக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
Read More : குஷியில் எடப்பாடி பழனிசாமி..!! அதிமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு..!! அதிர்ச்சியில் திமுக..!!



