‘ஜூலையில் ஜப்பானை தாக்கிய சுனாமி; உண்மையான புதிய பாபா வங்காவின் கணிப்பு!. அடுத்து என்ன நடக்கும்?.

Gemini Generated Image fo3katfo3katfo3k

ஜப்பானில் நேற்று 16 வெவ்வேறு இடங்களைத் தாக்கிய சுனாமி அலைகள், நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியது. ஜப்பானை மட்டுமல்ல, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஹவாயையும் அலைகள் அடைந்தன, ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.


2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் , தீர்க்க தரிசனங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வந்தது. கோவிட் காலத்திற்கு பின்னர் அதிக மக்களால் கணிப்புகள் நம்பப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் கணிப்புகளில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் நடைப்பெற்றதும் , அதைக் கணித்தவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றது. துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற ஜப்பானிய ஜோதிடர் ரியோ டாட்சுகியின் புதிய கணிப்புகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் மத்தியில், திடீரென்று மீண்டும் ஒரு பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார் ரியோ டாட்சுகி. கோபி பூகம்பம் மற்றும் 2011 சுனாமி போன்ற மிகவும் துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற, மங்கா கலைஞராக இருந்து தீர்க்கதரிசியாக மாறிய ரியோ டாட்சுகி, இந்த ஜூலை மாதம் ஒரு பேரழிவு தரும் கடல் பேரழிவை முன்னறிவித்திருந்தார். அதன்படி, இவரது கணிப்புகள் உலக மக்களை தற்போது கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவரது கணிப்புகள் நேற்று ஜூலை 30 அன்று உண்மையாகிவிட்டது போல் தெரிகிறது. ஜப்பானின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் அலைகள் பதிவாகின. இந்த நேரத்தில், அரசாங்க அவசரகால சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கின. 19 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவரது கணிப்புகள் தற்போது உண்மையாகி வருவதால் உலகில் அடுத்து என்ன பேரழிவு ஏற்படும் என்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ரியோ தட்சுகி முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் சிலரது கவனத்தை ஈர்த்தார். இது பல ஆண்டுகளாக அவர் கணித்த தீர்க்க தரிசனங்களின் தொகுப்பாக இருந்தது. இந்தப் புத்தகம் ஆரம்பத்தில் சிறிய கவனத்தைப் பெற்றிருந்தாலும், தட்சுகியின் பல கணிப்புகள் உண்மையாகி, அதன்பின் அவர் ஜப்பானை தாண்டி புகழ் பெற்றார்.

அவர் 2011 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த டோஹோகு பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்படும் பேரழிவுகளைப் பற்றிய கணிப்புகளை செய்திருந்தார். பின்னாளில் அவர் குறிப்பிட்ட மாதத்தில் பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்த சுனாமி ஏற்பட்டு 18,000 க்கும் மேற்பட்ட மக்களை பலி கொண்டது. ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுஉலையில் கசிவு ஏற்பட, அது உலகையே அதிர்ச்சியில் தள்ளியது. அவர் குறிப்பிட்ட சம்பவங்கள் நடைபெற்றதும் மக்கள் அவரை நம்பத் தொடங்கினார். சர்வதேச ஊடகங்கள் அவரை ஜப்பானின் பாபா வாங்கா என்றும், புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கின்றன.

ஜப்பான் பாபா ரியோ தட்சுகி எழுதிய “நான் கண்ட எதிர்காலம்” என்ற புத்தகம் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் ஜூலை 2025 இல் நிகழவிருக்கும் ஒரு பேரழிவு பற்றி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை மாதம் ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஒரு பெரிய விரிசல் உருவாக உள்ளது. இந்த விரிசல் காரணமாக இரு தட்டுகளில் உள்ள நாடுகள் மீது பேரழிவு ஏற்படும். இது 2011 ஆம் ஆண்டு டோஹோகு பேரழிவின் போது ஏற்பட்ட சுனாமி அலைகளை விட மூன்று மடங்கு உயரத்தில் சுனாமிகளை ஏற்படுத்தும். இது போன்ற மிகப் பெரிய சுனாமி வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும் .

கடலுக்கடியில் எரிமலை வெடித்து இழப்புகளை மேலும் அதிகரிக்கும். இந்த பேரழிவின் மையப்பகுதி ஜப்பான், தைவான், இந்தோனேசியா மற்றும் வடக்கு மரியானா தீவுகளை இணைக்கும் வைர வடிவப் பகுதியாக இதன் தாக்கம் சுற்றியுள்ள மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம். இந்த நேரத்தில் பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா அருகில் உள்ள சிங்கப்பூர் , மலேஷியா இந்தியாவின் அந்தமான் பகுதிகள் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம் என்று கணித்திருந்தார்.

Readmore: ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள்தான்!. தடயவியல் ஆய்வகம் அதை நிரூபித்துள்ளது!. அமித் ஷா திட்டவட்டம்!

KOKILA

Next Post

இனி 16 வயதுக்குட்பட்டவர்கள் YouTube சேனல்களை நடத்த தடை!. ஆஸ்திரேலியா அதிரடி!

Thu Jul 31 , 2025
ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது. இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது. YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த […]
aus youtube ban 11zon

You May Like