மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கோலாகலாக தொடங்கியது.. வரலாறு திரும்புகிறது.. 106 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தமால் விஜய்யை காணும் ஆர்வத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் கூடியுள்ளனர்.. முதன்முறையாக விஜய்யின் பெற்றோர், சந்திரசேகர், ஷோபா மேடை ஏறி உள்ளனர்.. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் 4 மணிக்கு தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான வெயில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மாநாடு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.. மேளதாள வாத்தியங்கள் முழங்க, லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துடன் உற்சாகம் தொடங்கி மாநாடு நடைபெற்று வருகிறது..
இதை தொடர்ந்து விஜய் நடித்த படங்களில் இடம்பெற்று, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பாடல்களின் தொகுப்பு ஒலிபரப்பப்பட்டது.. தொடர்ந்து, கொள்கைப் பாடலும், கொடிப்பாடலும் வெளியிடப்பட்டு உறுதி மொழி ஏற்கப்பட உள்ளது.. தொடர்ந்து விஜய் ரேம்ப் வாக்கிற்கு பிறகு கட்சிக் கொடி ஏற்றிவைக்கப்பட உள்ளது.. மேலும் இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.. அதன்பின்னர் விஜய் உரையாற்ற உள்ளார்.. விஜய்யின் உரையை கேட்கவும், அவரை பார்க்கவும் தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.



