சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது..
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்தது.. எனினும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது..
குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. மேலும் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் இல்லை எனில் திமுக வெற்றி பெற்றிருக்காது என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார்.. இதற்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. தொடர்ந்து மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை வலியுறுத்தி கருத்துகளை பதிவிட்டு வந்தார். எனினும், சமீபத்தில் சென்னை வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்..
ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. மேலும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது சரிவராது என்பது எங்களுக்கும் தெரியும் காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்.. முதல்வரின் இந்த கருத்தால் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.. பிரபல ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்த அவர் “ திமுக இன்னும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கவில்லை.. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நாங்கள் நடத்த காத்திருக்கிறோம்.. காங்கிரஸ் என்ன எதிர்பார்க்கிறது என்பது பேச்சுவார்த்தை தொடங்கிய உடன் அனைவருக்கும் தெரியும்.. நாங்கள் என்ன கேட்கிறோம், அவர்கள் என்ன தருகிறார்கள் என்பதை பிறகு நாங்கள் கூறுவோம்..
ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஏதேனும் ஒரு காரணம் அல்லது விருப்பத்திற்காக உருவாக்கப்படும்.. அந்த கட்சியை ஏற்றுக் கொள்ளலாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.. தேர்தல் தான் முடிவு செய்யும்.. 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் தவெகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது..
தவெக வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.. அவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறார்கள்.. இதன் மூலம் எங்கள் கட்சி அடிமட்ட அளவில் வலுப்பெற்று இருப்பது வெளிப்படுகிறது.. விஜய் உடன் பேசுவதை மறுக்கவில்லை.. அரசியலில் ஒவ்வொருவரிடமும் நீங்கள் தொடர்பில் இருப்பதை தவிர்க்க முடியாது.. எதிரிகள் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.. நிகழ்ச்சிகளில் அதிமுக தலைவர்களை சந்திக்கிறோம்.. நலம் விசாரித்துக் கொள்கிறோம்..” என்று தெரிவித்தார்..
திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ள நிலையில் தற்போது மீண்டும் திமுகவை சீண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் கிரிஷ் ஜோடங்கர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஆனால் ஏற்கனவே ஆட்சியில் பங்கு எல்லாம் கிடையாது என்று ராகுலிடம் கனிமொழி தெளிவாக கூறிவிட்டாராம்.. மேலும் கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துவிட்டால் அதிக தொகுதிகள் எல்லாம் தர முடியாது, 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.. இதை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் திமுக உடன் கூட்டணியை தொடருமா? அல்லது கூடுதல் தொகுதிகளுக்காக விஜய் உடன் புதிய பயணத்தை தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Read More : பாமக பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. உரிமையியல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..



