சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.. நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன..
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்துவிடுகிறது.. கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.. கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பல திட்டங்களை கொண்டு வந்தோம்.. இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் பார்த்துக் கொண்டோம்..
இந்த ஆண்டு பள்ளிக்கல்வி முடித்த 75% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.. மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதில் 100% தான் நமது இலக்கு.. நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 93 மாணவர்கள் சேர உள்ளனர்..
இரு மொழிக் கொள்கை தான் எங்கள் உறுதியான கொள்கை.. தமிழ், அங்கிலம் என இரு மொழிக் கொள்கை நம் கொள்கை.. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல.. பெருமையின் அடையாளம்.. அனைவருக்கும் கல்வி, உயர்தரமான கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்.. கல்வி அனைவருக்கும் பொதுவானது, அங்கு யாருக்கும் பாகுபாட்டுக்கே இடமில்லை.. பள்ளிகள் எல்லோருக்குமானது. அங்கு யாருக்கும் தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம். எதிர்காலத்திற்கு தேவையான தொலைநோக்கு பார்வை உடன் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு விஷயங்கள் இந்த கல்விக் கொள்கையில் இடம்பெறாது. பிற்போக்கு சிந்தனை இல்லாமல், முற்போக்காகவும், பகுத்தறிவாகவும் கல்வி இருக்கும்..” என்று தெரிவித்தார்.
Read More : Flash: தமிழ்நாட்டில் உதயமானது மாநில கல்வி கொள்கை.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்..!!