தலைகீழாக மாறிய வானிலை..!! தமிழ்நாட்டிற்கு குட் நியூஸ்..!! வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் திடீரென வெப்பநிலை குறைந்து வானிலை குளிராகி உள்ளது. தமிழ்நாட்டிற்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் சாரல் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மழை பெய்யாது. மேலே குறிப்பிட்டப்படி லேசான சாரல் மழையை தவிர்த்து சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றில் இருந்து கடுமையான வெயில் அடிக்கும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்றில் இருந்து வெப்பநிலை உயரும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட வட தமிழ்நாட்டில் மிதமான வெப்ப நிலையில் நிலவும் கடைசி நாளாக இன்று இருக்கலாம். அதனால் நாளை முதல் படிப்படியாக அதிகபட்ச வெப்பநிலையானது நிலவும். வெப்பநிலை நாளையில் இருந்து வலுவடைந்து குறைந்தபட்சம் 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையை எட்டும். மேற்கத்திய காற்றுகளின் தாக்கத்தால் வெப்பநிலை தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மீனவர்கள் எச்சரிக்கை :

மன்னார் வளைகுடா மற்றும் தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும். 25.05.2023 முதல் 27.05.2023 வரை இந்த பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். 26.05.2023 மற்றும் 27.05.2023 நாட்களிலும் கடல் பகுதியில் தீவிர காற்று இருக்கும். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 55 கிமீ வேகத்தில் கூட காற்று வீசும். இதனால் அந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

நடைபயிற்சி செல்ல நேரமில்லையா..? இனி கவலையே வேண்டாம்..!! இந்த 6 வழிகளை முயற்சி செய்யுங்கள்..!!

Wed May 24 , 2023
நடைபயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த நடைபயிற்சியானது பல வகையில் ஆரோக்கியத்தை தருகிறது. அதே போன்று, உடல் பருமன் அதிகமாக இருப்போருக்கும் இது உதவுகிறது. மேலும், சர்க்கரை நோய், இதய நோய், மனநல பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கும் நடைபயிற்சி நல்ல தீர்வாக அமைகிறது. பொதுவாக நடைபயிற்சியை காலை நேரத்தில் பயிற்சியாக செய்வது தான் பெரும்பாலோரின் வழக்கமாகும். ஆனால், […]

You May Like