மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில், திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை ஒருவர் தனது மனைவியின் மறைக்கப்பட்ட உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலிரவு அன்று மனைவியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதை கணவர் கவனித்துள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மனைவி தரப்பில் இருந்து முன்னுக்குப் பின் முரணான பதில்களே கிடைத்துள்ளன. இதனால் உண்மையை அறிய முடிவு செய்த கணவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) கையில் எடுத்தார். தனது மனைவியின் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில், அவரது மருத்துவ வரலாறு குறித்த விவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் கோரி விண்ணப்பித்தார்.
மருத்துவமனையில் இருந்து வந்த பதில் அந்த இளைஞரை நிலைகுலைந்து போகச் செய்தது. திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அவரது மனைவி கருக்கலைப்பு செய்திருந்தது அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் உறுதியானது. இந்த ரகசியம் அம்பலமானதை தொடர்ந்து, இரு குடும்பங்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
உண்மையை மறைத்து தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்துவிட்டதாக கணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமண உறவில் நேர்மை இல்லாதது பெரும் மன உளைச்சலைத் தந்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சட்ட ரீதியான மோதலாக மாறியுள்ளது.
Read More : திடீர் திருப்பம்..!! திமுகவுக்கு தாவும் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்..? அதிர்ச்சியில் இபிஎஸ்..!!



