உத்தரப்பிரதேச மாநிலம், பராபங்கி மாவட்டத்தில் உள்ள சஹாவ்பூர் கிராமத்தில், சந்தீப் என்பவரது வீட்டில் நேற்று காலை 31 வயது மம்தா என்ற பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில், இறந்து கிடந்தவர் கோரக்பூரைச் சேர்ந்த மம்தா என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. மம்தாவுக்கும் சந்தீப்புக்கும் இடையே கள்ள உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், சந்தீப்புக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்தச் சூழலில், சந்தீப்பின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், முன்தினம் இரவு மம்தா சந்தீப்பின் வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில் சந்தீப் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த அவரது பெற்றோரும், 4 சகோதரிகளும் மம்தாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதத்தின் உச்சத்தில், வீட்டில் இருந்த கோடரியை எடுத்து அவர்கள் மம்தாவை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தீப் திரும்பி வந்தபோது, மம்தா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் கோடரி ரத்தக்கறையுடன் கிடந்தது. உடனடியாக அவர் போலீசுக்கு தகவல் அளித்ததுடன், தனது பெற்றோர் மற்றும் சகோதரிகள்தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் குற்றம்சாட்டினார். சம்பவம் நடந்ததில் இருந்து சந்தீப்பின் பெற்றோரும், அவரது 4 சகோதரிகளும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read More : FLASH | புஸ்ஸி ஆனந்த் முன்னே அடித்துக் கொண்ட தவெக தொண்டர்கள்..!! அதிர்ச்சியில் விஜய்..!! பெரும் பரபரப்பு..!!



