உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா அருகே பதியாபுரா கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ரன்வீர் சிங் (45) என்பவர், தனது மனைவியின் தகாத உறவை கண்டித்ததற்காக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங்கின் மனைவி பூஜா (40), அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
ரன்வீர் சிங் தனது பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வதை பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி, தங்களது உறவை தொடர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் ரன்வீர் சிங்கிற்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். தங்களது இந்த உறவுக்கு ரன்வீர் தடையாக இருப்பார் என்று கருதிய பூஜா, தனது கள்ளக்காதலனுடன் இணைந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று திட்டமிட்டபடி, ரன்வீர் சிங்கிற்கு மதுவை அதிக அளவில் ஊற்றிக் கொடுத்து அவரைப் போதையாக்கி உள்ளார் பூஜா. ரன்வீர் சுயநினைவின்றி நிலைகுலைந்திருந்த நேரத்தில், தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் இணைந்து கோடாரியால் ரன்வீர் சிங்கை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். இதில் ரன்வீர் சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ரன்வீரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பூஜாவையும் அவரது கூட்டாளியையும் தனிப்படை அமைத்துத் தேடிய போலீஸார், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இருவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை துடிக்க துடிக்க கொன்ற இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : துரோகியான உயிர் நண்பன்..!! துப்பாக்கி முனையில் மனைவியை பலாத்காரம் செய்த நட்பு..!! திடுக்கிடும் சம்பவம்..!!



