செயலி மூலம் அறிமுகமான பெண் … திருமணமான இரவே பணம், நகையுடன் ஓட்டம் …

செயலி மூலமாக அறிமுகமான பெண் ஒருவர் திருமணமான இரவே யாருக்கும் தெரியாமல் பணம் , நகைகளை மூட்டைக் கட்டி எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

            சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள சாணாரப்பட்டி என்னும் இடத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு  மகன் இருக்கின்றார் . தன்னையும் மகனையும் பார்த்துக் கொள்ள இன்னொரு திருமணம் செய்து கொள்ள நினைத்தார். இந்நிலையில் செல்போனில் ஒரு செயலியின் மூலம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் அறிமுகமானார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கவிதா என்ற அந்த பெண்ணுடன் செந்தில் பேசி வந்துள்ளார். இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி ஏற்பட்டுவிட்டதை உணர்ந்துள்ளார்.


இதனிடையே தனியாக தாயுடன் வசித்து வருவதால் எங்களை பணம் கேட்டு மிரட்டுகின்றனர். கடன் வாங்கியதை திருப்பி கேட்கின்றனர். வீட்டில் அடைத்து வைத்துள்ளனர் என கேட்டு அடிக்கடி ஏதாவது ஒரு கதையை சொல்லி பணம் கேட்டுள்ளார். உச்சபச்ச காதலில் கண் தெரியாமல் பணத்தை வாரிவாரி வழங்கியுள்ளார்.

 சமீபத்தில் சேலம் வந்த அந்த பெண்ணிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார். சம்மதம் தெரிவித்ததால்  கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்த செந்தில், செல்போன் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

திருமணமான அன்றைய தினம் இரவு, திடீரென அந்த பெண் உடல்நிலை சரியில்லை என கூறி உள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்பி வந்ததும் சோர்வாக இருப்பதாக கூறி அந்த பெண் தூங்கிவிட்டார். பாவம் தொல்லை கொடுக்க வேண்டாம் என நினைத்து செந்தில் நன்றாக உறங்கி உள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அந்த பெண் காணாமல் போனதை அறிந்து குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

திருமணம்

அப்போது தான், வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் அந்த பெண் மாயமானதும் செந்திலுக்கு தெரிய வந்துள்ளது. செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். நான் என் அம்மாவை பார்க்க வேண்டும் என தோன்றியது . நான் அம்மாவீட்டுக்கு வந்துவிட்டேன். விரைவில் திரும்பி வந்துவிடுகின்றேன். என கூறி உள்ளார். ’’ச்சே ச்சே அப்படி இருக்காது என நினைத்து நகைகள் திருடு போய்விட்டதாக நினைத்துள்ளார். இதுவரை அந்த பெண் திரும்பி வராததால் அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

.இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த இதன் முதற்கட்ட விசாரணையில், கோவையிலும் இதே போல ஒரு நபரை அந்த பெண் ஏமாற்றி சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்மந்தப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.

Next Post

ஈராக்கில் ஈரான் புரட்சி படை தாக்குதல்; 58 பேர் படுகாயம்... 13 பேர் பலி..!!

Thu Sep 29 , 2022
ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஈரானின் புரட்சிகர காவல்படை ஏவுகணைகள் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஈரான் புரட்சிப்படை, ஈரானின் வடகிழக்கு பகுதியில் நடத்திய தாக்குதலில் மேலும் 58 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக்கின் குர்திஷ் எதிர்ப்பாளர்கள் தற்போது அமையின்மையில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் குற்றம் […]
Untitled 195

You May Like