சாம்பியன் பட்டத்தை மீண்டும் தட்டித்தூக்கிய மகளிர் அணி..!

கடந்த 7 ஆண்டுகளில் இந்திய கால்பந்தில் பலம் வாய்ந்த அணியாக உருவாகி உள்ள தமிழ்நாடு அணி, இந்த ஆண்டு சீனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதியதால் போட்டி தொடங்குவதற்கு முன்பே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. போட்டி தொடங்கியது முதல் தமிழ்நாடு அணி ஆதிக்கம் செலுத்தினாலும் போட்டியின் 50வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை துர்கா own goal அடித்தது மூலம் ஹரியனா அணி 1-0 என முன்னிலைக்கு சென்றது. அதனை தொடர்ந்து 56வது நிமிடத்தில் தமிழ்நாடு வீராங்கனை பிரியதர்ஷினி கோல் அடித்து அசத்தினார். பின்னர் 83வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தமிழ்நாடு வீராங்கனை இந்துமதி கோல் அடித்து அசத்தினார்.


இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய தமிழ்நாடு அணி வீராங்கனைகள், 37 கோல்களை அடித்தது மட்டும் இல்லாமல் வெறும் 2 கோல்களை மட்டுமே எதிர் அணிக்கு விட்டு கொடுத்து உள்ளனர். அதேபோல 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தமிழக அணி தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வென்ற நிலையில் தற்போது தமிழ்நாடு அணி மீண்டும் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய சாம்பியன் பட்டம் வென்ற கால்பந்து வீராங்கனைகளுக்கு தற்போது வரை அரசு பரிசுத் தொகையை வழங்காமல் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு வெற்றி பெற்ற அணிக்கு ஊக்கதொகையை வழங்கும்போது 2018ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அணிக்கும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வீராங்கனைகளிடம் உள்ளது.

RUPA

Next Post

இந்தியன் 2..!! பொத்தி பொத்தி வச்சிருந்த தேதி..!! பொசுக்குனு போட்டுடைத்த உதயநிதி..!!

Thu Jun 29 , 2023
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படம் அந்த கால கட்டத்திலேயே பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் அதே கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2020இல் இப்படத்தின் […]
Udhayanithi Kamal

You May Like