விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது ஒரு விறுவிறுப்பான சம்பவம் நடந்து வருகிறது. பாண்டியனின் மூத்த மகன் சரவணனின் மனைவி தங்கமயில். பல பொய்களைச் சொல்லிதான் மயிலின் பெற்றொர் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். இவ்வளவு நாளா, பாண்டியன் குடும்பத்திற்கு இது எதுவுமே தெரியாது. இதையெல்லாம் அறிந்த சரவணன் உண்மையை போட்டுடைக்கவே குடும்பத்தில் பிரச்சனை பூதாகரமாய் வெடித்தது.
இன்றைய எபிசோட்டில், மயில் பற்றிய உண்மை தெரிந்த பின்னர் அவளுடைய அம்மா, அப்பாவை வீட்டுக்கு வர சொல்லி போன் போடுகிறான் பாண்டியன். இதனிடையே மயில் ரூமுக்குள் போய் கதவை பூட்டி கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் அரசி, என்னம்மா அண்ணி உள்ள போய் கதவை பூட்டிட்டாங்க. ஏதாவது பண்ணிக்க போறாங்க என்கிறாள். இதனையடுத்து ஒவ்வொருவராக வந்து கதவை தட்ட மயில் திறக்காமல் இருக்கிறாள்.
பாண்டியன் வந்து கூப்பிட்டதும் மயில் கதவை திறக்கிறாள். மயிலின் அம்மா அப்பா வீட்டுக்கு வர்ற வரை யாரும் எதுவும் பேச வேண்டாம் என்கிறான் பாண்டியன். இந்தப்பக்கம் காந்திமதி எதிர் வீட்டில் ஒரே சத்தமாக இருப்பதாக மருமகள்களிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறாள். பழனி அங்க இருந்திருந்தால் என்ன பிரச்சனை தெரிஞ்சிருக்கும். இப்போ என்ன நடக்குதுன்னே தெரியலை என்கிறாள். அவளை வடிவு, மாறி சமாதானம் செய்து உள்ளே அழைத்து செல்கின்றனர்.
அந்த சமயம் விஷயம் அறிந்த குழலி வீட்டிற்கு வருகிறாள். சரவணனிடம் உனக்கு இப்படி நடக்கனுமா தம்பி என்று புலம்புகிறாள். அதன்பின்னர் மயிலை பார்த்து எல்லாத்துலயும் பொய் சொல்லிட்டு நாடகம் ஆடிட்டு இருக்கியா என்று வெளுத்து வாங்குகிறாள். உண்மை வெளிவந்தது தெரியாமல் பாண்டியன் வீட்டிற்கு மயிலின் அம்மா அப்பா சந்தோஷமாக வருகிறார்கள்.
அவர்களிடம் நாங்க தான் உங்களுக்கு இழிச்ச வாயா.. எங்க குடும்பத்த இப்படி ஏமாத்திட்டீங்களே என கோமதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள். என்ன சொல்லுறீங்க சம்மந்தி எங்களுக்கு ஒன்னுமே புரியல என மயில் அம்மா சொல்கிறான். உங்க மகள் என்ன படிச்சீருக்கா என கோமதி கேட்க, மயில் அப்பா என் மக எம் ஏ இங்கிலீஸ் லிட்டரேச்சர் என்கிறான். இதை கேட்டு ஆத்திரமடைந்த சரவணன் கையில் கிடைத்த பொருளை எடுத்து அடிக்க மாய்கிறான். இதனையடுத்து வீட்டில் என்ன ன நடந்தது என்பதை நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.
Read more: இந்த உணவுகளுடன் கருவாடு சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிடும்.. அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..?



