உலகில் பல தீர்க்கதரிசிகள் வரலாற்றில் இடம் பிடித்திருந்தாலும், பாபா வங்காவின் பெயர் இன்று பெருமளவில் பேசப்படுவது அவரது கணிப்புகள் நிகழ்வுகளாக மாறியுள்ளதால்தான். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, குழந்தை பருவத்தில் பார்வை இழந்த பிறகு, எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் சக்தியை பெற்றதாக நம்பப்படுகிறது.
இறப்பதற்கு முன் பல ஆண்டுகளுக்குரிய கணிப்புகளை பாபா வங்கா கணித்து வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் உலகம் சந்திக்கப்போகும் முக்கியமான மாற்றங்கள், பேரழிவுகள், தலைவர்களின் எழுச்சி உள்ளிட்டவற்றை எழுத்துப் பதிவாகவும், வாய்மொழியாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா முன்பே சில அதிர்ச்சி தரும் கணிப்புகளை கணித்துள்ளார். ஐரோப்பா கண்டத்தில் ஒரு பெரிய மோதல் ஏற்படும் என்றும், அது மக்கள் தொகையை கடுமையாக பாதிக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்றும், பல நாடுகள் அதனால் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் பாபா வங்கா கணித்ததாக கூறப்படுகிறது. மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் தொடர்ந்து உலகின் பல பகுதிகளை தாக்கி வரும் நிலையில், இந்தியாவும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து கேரளா வரை கடும் மழை, வெள்ளம் மற்றும் மேக வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவுகள், பாபா வங்கா முன்னர் எச்சரித்திருந்த இயற்கை சீற்றத்தின் ஒரு பகுதியே என நம்பப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் எரிமலை வெடிப்புகள் ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையும் அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
3ஆம் உலகப் போர் வெடிக்கும் அபாயம் 2025இல் நிலவும் என்றும், அதில் உலகம் முழுவதும் பதற்றம் நிலவலாம் என்றும் பாபா வங்கா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, ஐரோப்பாவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் வாய்ப்பு மற்றும் பூமியின் முக்கிய மனிதக் குழுக்கள் அழிவுக்கு உள்ளாகும் அபாயம் பற்றியும் அவர் முன் எச்சரித்துள்ளார்.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உலக அரசியல் மேடையில் மிக வலுவான தலைவராக மாறுவார் எனவும் பாபா வங்கா கணித்திருந்தார். தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் அவரது தாக்கம் அதிகரித்து வருவது, இந்த கணிப்பு உண்மையாகியுள்ளது. 2025ஆம் ஆண்டில் நிகழும் நிகழ்வுகள் பாபா வங்காவின் கணிப்புகளோடு ஒத்துப்போகும் வகையில் உள்ளது. பலரிடமும் இந்தக் கணிப்புகள் உண்மைதானா என்ற கவலை கிளம்பியுள்ளது.