இங்கிலாந்து முழுவதும் குறைந்தது 85 இடங்களில் “கும்பல் அடிப்படையிலான குழந்தைகள் பாலியல் சுரண்டல்” சம்பவம் அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கும்பல் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் அந்நாட்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ், தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் “grooming gangs” என்ற விசாரணையின் ஒருபகுதியாக, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த “பாலியல் கும்பல்கள்”, கடந்த பல தசாப்தங்களாகச் செயல்பட்டு வந்துள்ளதாகவும், இது முன்பைவிட பல பகுதிகளில் பரவலாக இருந்துள்ளதாகவும் கண்டறிந்துள்ளது. மேலும், இக்குறிக்கிட்ட பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த கும்பல்களால் லட்சக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் ரூபர்ட். இதில் 1960களில் நடந்த சில வழக்குகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதுவரை வெளியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இதுவே விரிவானது எனக் கூறும் ரூபர்ட், வெள்ளையினப் பெண்களைக் குறிவைத்து பாலியல் சுரண்டலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றத்துக்கு காரணமான வெளிநாட்டினரை நாடுகடத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
இந்த கும்பல்கள் பற்றி அறிந்தும் எதுவும் செய்யாமல் இருந்த வெளிநாட்டினரை நாடு கடத்தவும், இதேப்போல அறிந்தும் புகார் அளிக்காமல் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் மீது வழக்குதொடுக்கவும் வேண்மெனக் கோரியுள்ளார் ரூபர்ட். ஏனென்றால் விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின் படி பலர் இந்த கும்பல் குறித்து அறிந்திருக்கக் கூடும் என்கிறார்.
ரூபர்ட், பாகிஸ்தானியர்கள் பரிசுகள் வழங்கும் அப்பாவியான வெள்ளையினப் பெண்களைக் கவர்ந்து தங்கள கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்களை மிரட்டி, ஒரு கும்பலில் உள்ள வெவ்வேறு நபர்கள் நீண்டகாலத்துக்கு அடுத்தடுத்து ஒரே பெண்ணிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாகவும் கூறியிருக்கிறார்.