பலருக்கும் ரயில் பயணம் என்றால் ஒரு சுவாரஸ்யமான அனுபவம். சிலர் ரயில் ஜன்னலின் பக்கத்தில் அமர்ந்து பாலைவனக் காட்சியை ரசிப்பார்கள்; சிலர் மலைகளுக்குள் சுழலும் பாதையில் சக்கரங்களின் சத்தத்தை கேட்டு மகிழ்வார்கள். ஆனால் முழுக்க முழுக்க தங்கம் பூசிய ஒரு ரயில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
ஆம்! சவுதி அரேபியா விரைவில் “Dream of the Desert” என்ற பெயரில் உலகின் மிகவும் ஆடம்பரமான ரயிலை அறிமுகம் செய்ய உள்ளது.. இதன் கூரை 22 காரட் தங்கத்தால் பூசப்பட்டது.
இந்த “Dream of the Desert” ரயில் ஒரு மொபைல் அரண்மனை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.. அதாவது இது ஒரு ஹோட்டலும், உணவகமும், கலாசார அனுபவ மையமும் ஆகும். இந்த பிரமாண்ட ரயிலை இத்தாலியின் Arsenale Group மற்றும் Saudi Arabia Railways (SAR) இணைந்து உருவாக்குகின்றன. இது சவுதியின் “Vision 2030” திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. நாட்டை எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து சுற்றுலா மற்றும் ஆடம்பரத்திற்கான மையமாக மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது..
ரயிலின் சிறப்பம்சங்கள்
ரயிலின் பயண பாதை: ரியாத் முதல் அல்-குரைய்யத் வரை, மொத்தம் 1,300 கிலோமீட்டர்
ரயிலில் மொத்தம் 14 பிரமாண்ட பெட்டிகள்
22 காரட் தங்க கூரை மற்றும் முரானோ கண்ணாடிகள் அலங்காரம்
மர பொறித்த சுவர்கள், அழகிய டைல் பார் போன்ற ராஜபாட்டை உள்துறை வடிவமைப்பு
மொத்தம் 31 தனியார் சுவீட் அறைகள் + 2 அதிபர் சுவீட்கள்
ஒரே நேரத்தில் அதிகபட்சம் 66 பயணிகள் பயணிக்க முடியும்
விலை மற்றும் ஆடம்பரம்
இந்த ரயில் பயணம் உண்மையிலேயே தங்கத்தின் விலைக்கு சமம். ஒரு பயணத்துக்கான கட்டணம் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரை) இருக்கும். மொத்தம் ரூ.461 கோடி ரூபாய் செலவில் இந்த ரயில் கட்டப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. அதில் தங்கம் பூசப்பட்ட கூரைக்கே செலவாகும் தொகையில் இந்திய ரயில்வேயின் பல புதிய பெட்டிகளை உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், “Dream of the Desert” என்பது ஒரு ரயில் பயணமல்ல.. அது ஒரு நகரும் அரண்மனை அனுபவம்!
Read More : 2850 கி.மீ. நீளம்.. உலகின் 2-வது நீளமான நதி.. 10 நாடுகள் வழியாக பாய்கிறது; கங்கை, யமுனை அல்ல..!



