“உலகப் பத்திரிகையே நம்ம தமிழ்நாட்டை சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்றாங்க..” CM ஸ்டாலின் பெருமிதம்..!

cm stalin 2

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்றது. முதல்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்..


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ புத்தாண்டை புத்துணர்வு மிக்க மாணவர் சமுதாயத்துடன் தொடங்குவது பாசிடிவ் எனர்ஜியை தருகிறது.. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து தான் “ உலகம் உங்கள் கையில்” விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.. எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது; மாணவர்கள் வளர்ந்தால் மாநிலமும் வளரும், நாடும் வளரும்.

திராவிட இயக்கம் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கம்.. இலவச மடிக்கணினி திட்டம் ஒன்றும் செலவு திட்டம் அல்ல, முதலீடு.. உங்கள் கையில் இருக்கும் லேப்டாப் ஒன்றும் பரிசு பொருள் அல்ல.. உலகத்தை ஆள்வதற்கான வாய்ப்பு. மனித சமுயதாயத்திற்கு காலம் தந்துள்ள இரண்டாவது நெருப்பு தான் செயற்கை நுண்ணறிவு. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து அனைத்தையும் நமது கைகளுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அதை முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும்.. AI – ஆல் ஒருபோதும் மனிதர்களை Replace செய்ய முடியாது.. நமது பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செய்வதற்கு தான் AI துணைநிற்கும்..

திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை AI உருவாகி இருக்கிறது.. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. இந்த வளர்ச்சியை குறை சொல்லி முடங்கிப் போவது தான் முட்டாள்களின் பாதை.. இதை பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தை தொட வேண்டியது தான் உங்களின் வேலை..

இன்று உங்கள் கைகளில் இருக்கும் லேப்டாப்பை படம் பார்க்க, கேமஸ் விளையாட பயன்படுத்த போறீங்களா? இல்லை இதை உங்கள் வேலைக்கான லான்ச் பேடாக பயன்படுத்த போறீங்களா? இது தான் நாங்கள் வைக்கும் கேள்வி.. எல்லாவற்றிற்கும் நல்லது, கெட்டது என இரு பக்கம் உள்ளது.. அதில் நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்களோ அதை பொறுத்து தான் வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும்.. உலகத்தோடு போட்டி போடுங்க.. அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான பொருளை தான் உங்கள் கையில் கொடுத்திருக்கிறோம்.. எதை பற்றி கவலைப்படாதீங்க. படிங்க. படிங்க.. படிங்க.. உங்களை பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்.. உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கிறது..

அம்மாக்களுக்கு ரூ.1000 தருகிறோம், மாணவர்களுக்கு ரூ.1000 தருகிறோம். மாணவிகளுக்கு ரூ.1000 தருகிறோம்.. பொங்கல் கொண்டாட ரூ.3000 தருகிறோம்.. பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறோம்..

உலகப் பத்திரிகையே நம்ம தமிழ்நாட்டை சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்றாங்க.. இதெல்லாம் போதாது.. இன்னும் வளர்ச்சி வேண்டும்.. தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது.. உலகமே உங்கள் கையில் இருக்கிறது.. நீங்களும் ஜெயிச்சு வாங்க.. நாங்களும் ஜெயிச்சு வருகிறோம்.. எப்பவுமே உங்கள் கூட இருப்போம்.. தமிழ்நாடு வெல்லட்டும்..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து..! பயணிகளுக்கு பாதிப்பா? பெரும் பரபரப்பு..!

RUPA

Next Post

மட்டன் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை எக்காரணம் கொண்டும் சாப்பிடாதீங்க! அது எவ்வளவு ஆபத்துன்னு தெரியுமா?

Tue Jan 6 , 2026
விடுமுறை நாட்களில் பல வீடுகளில் அசைவ உணவுகள் நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், மட்டன் , சிக்கன் அல்லது மீன் உணவுகள் நினைவுக்கு வரும். சூடான சாதத்துடன் மட்டன் குழம்பு மற்றும் ரொட்டி சாப்பிடுவது பலருக்கு ஒரு திருவிழா போன்ற உணர்வைத் தரும். ஆனால், மட்டன் எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதை நாம் எப்படி சாப்பிடுகிறோம், சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உடலின் ஆரோக்கியம் பெருமளவில் அமைகிறது. […]
mutton

You May Like