ஜூலை மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதத்தில் மீண்டும் பள்ளி திறப்பு என்பது இரண்டாவது வாரம் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயில் குறைந்ததால் பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திறக்கப்படும் என தெரிவித்து, அன்றே திறந்து மாணவர்கள் கோடை விடுமுறைக்கு பின் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
ஜூன் மாதத்தில் சனி, ஞாயிறு கிழமைகளை தவிர ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு செல்ல நேரிட்டது, அதுபோல் ஜூலை மாதம் இருக்குமா, எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என பார்க்கலாம். நாளை முதல் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஜூலை மாதத்தில் அரசு பண்டிகை விடுமுறை என்று பார்த்தால் மொஹரம் பண்டிகை மட்டுமே உள்ளது. இப்பண்டிகையும் ஜூலை 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு செல்வதால் மாணவர்களை கவலையில் உள்ளனர்.
ஜூலை மாதத்தில் வார விடுமுறை நாட்கள் போக அனைத்து நாட்களும் பள்ளிகள் இயங்கும். ஆகவே, மொத்தம் 23 நாட்கள் வேலை நாட்கள் ஆகும். ஜூலை 16 முதல் ஜூலை 18 வரை முதல் இடைப்பருவத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை பள்ளிகளின் மூலம் பகிரப்படும்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சனி, ஞாயிறு தவிர்த்து கூடுதல் நாட்கள் விடுமுறை இல்லாதது பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர் என அனைவரையும் சோகம் அடையச் செய்தது. இதற்கிடைய, பள்ளிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோர் மறுநாள் அழைத்து வந்து காரணத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
* ஜூலை 7-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் அன்று உள்ளூர் விடுமுறை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஜூலை 16-ம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நாளில் உள்ளூர் விடுமுறை விடுக்க வாய்ப்பு உள்ளது.
* ஜூலை 28-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்புரத் தோரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் அங்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Read more: பாஜக மட்டும் அல்ல.. எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது..!! – EPS அனல் பறக்கும் பேச்சு