புதுச்சேரி அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது.. பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின் தான் இந்த கட்சியின் நிறுவன தலைவர் ஆவார்.. இந்த நிலையில் சார்லஸ் மார்ட்டின் நேற்று பழனிக்கு வந்தார்.. அப்போது அவர் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலுக்கு சென்றுதனது வேட்புமனுவை சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.. தொடர்ந்து கோவில் வளாகத்தில் விளக்கு ஏற்றி வழிபட்ட அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்..
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ புதுச்சேரியில் என். ரங்கசாமி தலைமையிலான பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைந்துள்ளது. எங்கள் கூட்டணியில் தெளிவு உள்ளது.. எனவே மாற்றத்தை கொண்டு வர தீவிரமாக வேலை செய்து வருகிறோம்..
தவெக ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்திருக்க வேண்டும்.. ஆனால் விஜய்யுடன் இருக்கும் அந்த குழு சரியான நடத்தப்படாமல் உள்ளது.. திமுக உளவாளிகள் தவெகவில் ஊடுருவி இருப்பதால், அவர்கள் கூட்டணிக்கு செல்ல விடமாட்டார்கள். அவர்களின் அஜெண்டா, என்னவெனில், தவெகவை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பது தான்.. அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்..
Read More : ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் வாகனத்துடன் மோதி விபத்து..! பலர் காயம்..! நியூயார்க்கில் பரபரப்பு..!



