திமுகவில் 4 அதிகார மையங்கள் உள்ளன.. 150% வரியை உயர்த்திய இந்த கொடுங்கோல் ஆட்சி தேவையா? இபிஎஸ் பிரச்சாரம்..!

eps campagin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் அனல்பறக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்கள் முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா, ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.. பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளும் ஈடுபட்டு வருகின்றன..


அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.. மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.. தொகுதி பங்கீடுகளை அறிவித்தோம்.. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்தோ.. தேர்தல் அறிக்கை வெளியிட்டோம்.. முதல்கட்டமாக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டோம்.. ஆனால் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு இடமில்லை.. கூட்டணியில் எவ்வளவோ முயன்றும் கம்யூனிஸ்ட்கள், விசிகவுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது.. அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு திமுக அதிக தொகுதிகளை ஒதுக்கி உள்ளது..

திமுகவில் 4 அதிகார மையங்கள் உள்ளன.. ஒன்று முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி ஸ்டாலின், 3-வது ஸ்டாலினின் மருமகன் சபரீசன், 4வது ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்.. இந்த 4 அதிகார மையங்கள் தான் தமிழ்நாட்டை ஆட்டி படைத்து வருகிறது. இதற்கெல்லாம் விடிவுகாலம் தரும் தேர்தல் தான் இந்த தேர்தல்..

திமுக ஆட்சியில் எல்லாமே கலக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் தான்.. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசால் முழுமையாக முடிக்க இயலவில்லை..

ஸ்டாலின் தான் வந்தாரு, மழைக்காலத்தில் நீச்சலடிக்க விட்டாரு. கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சி திறமையான நிர்வாகத்தை வழங்கியது.. 525 தேர்தல் அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.. திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள் ரத்து செய்தார்கள்.. ரத்து செய்தார்களா..? நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று முதல்வர் சொல்லிவிட்டாரு..

திமுக ஆட்சியில் வீட்டு வரி உயர்வு, கடை வரி உயர்வு.. 100% சதவீதம் வீட்டு வரியை உயர்த்தினால் மக்கள் எப்படி சுமையை சுமைப்பார்கள்.. ஆண்டுக்கு 5% மின் கட்டணம் உயர்வு.. மக்களை வாட்டி வதைக்கும் அரசாக விடியா திமுக அரசு இருக்கிறது.. சிறு குறு நடுத்தர தொழில்கள் செய்யமுடியவில்லை.. 150% வரிகளை உயர்த்திய இந்த கொடுங்கோல் ஆட்சி தேவையா?

திமுக ஆட்சிக்கு வந்த பின் விலைவாசி விண்ணை முட்டிய அளவுக்கு உயர்ந்துள்ளது.. இந்த ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர்.. அதை பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.. 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவிலேயே கடன் வாங்கி சாதனை படைத்த அரசு திமுக அரசு.. கடன் வாங்குவதில் தான் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

Flash : 28-ம் தேதி முதல் விஜய் தேர்தல் பிரச்சாரம்.. எந்த தொகுதியில் தொடங்குகிறார்..?

Wed Mar 25 , 2026
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது.. விரைவில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய […]
vijay 2

You May Like