மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!

jappan village

மாற்றம் என்பது இயற்கையானது. ஆனால், அந்த மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி என்பது மனிதர்களின் மனப் பெருமைக்கு சான்றாக அமையும். ஜப்பானின் ஷிகொக்கு தீவில் உள்ள நகோரோ கிராமம் இன்று உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.. அது மக்கள் தொகையால் அல்ல, மனித வடிவ பொம்மைகளால்.


ஒருகாலத்தில் மக்கள் திரண்டுகொண்டிருந்த இந்த கிராமம், தொழில்கள் முடங்கியதனால் காலப்போக்கில் வெறிச்சோடி விட்டது. இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு புறப்பட்டனர். இறுதியில், வயோதிபர்கள் மட்டுமே மிச்சமிருந்தனர். அந்தக் கிராமத்தில் பிறந்த அயனோ சுகிமி (67), பல ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக ஒசாகா நகருக்கு இடம்பெயர்ந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு நாள் தன் பிறந்த ஊரை பார்ப்பதற்காக திரும்பினார். ஆனால் எதிர்பார்ப்பு ஒன்று… நிஜம் வேறொன்று!

மக்கள் நடமாட்டமே இல்லாத வெறிச்சோடிய கிராமம் அவருக்கு வேதனையை ஏற்படுத்தியது. கடந்த கால நினைவுகள் கலந்த கண்களில் கண்ணீருடன், ஒரு துணிவான முடிவை எடுத்தார் சுகிமி. அந்த கிராமத்திற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும் என்பதற்காக அவர் மனித வடிவ பொம்மைகளை உருவாக்கத் தொடங்கினார்..

ஒவ்வொன்றுக்கும் முகமும், ஆடையும், நிலைமையும் தனிச்சிறப்புடன். ஒரு பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகள், மார்க்கெட்டில் ஏதேனும் வாங்கும் சண்டை வாடிக்கையாளர்கள், வேலைக்குச் செல்லும் விவசாயிகள் என பொம்மைகளின் வாழ்க்கை ஓவியமாக உருவெடுக்கத் தொடங்கியது. கிராமத்தில் இருந்த பழைய பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருந்ததால், அதை திறந்து அதற்குள் மாணவர்கள், ஆசிரியர், வகுப்பறை சூழல் என அனைத்தையும் பொம்மைகளால் சாட்சியமாக்கினார். இப்போது அந்த இடம் மீண்டும் உயிருடன் இருப்பதுபோலவே உள்ளது.

இன்றைய நிலவரப்படி, நகோரோ கிராமத்தில் 29 மனிதர்களுடன் 350 க்கும் மேற்பட்ட பொம்மைகள் வாழ்க்கையை பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழச்செய்கின்றன. இதன் விஷித்த தன்மை உலகுக்கே தெரியத் தொடங்க, சுற்றுலா பயணிகள் இக்கிராமத்தை பார்வையிட வர தொடங்கிவிட்டனர். “வெறிச்சோடி விட்ட கிராமம்”, இப்போது “பொம்மைகளால் உயிரோட்டம் பெற்ற வாழும் கலைக்கூடம்” ஆக மாறியுள்ளது.

Read more: TNPSC குரூப்-1 தேர்வு: திமுக குறித்த கேள்வியால் வெடித்தது சர்ச்சை..!! என்ன விஷயம் தெரியுமா..?

Next Post

உச்ச நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை தமிழ் ஒலிக்க வேண்டும்..!! - முதலமைச்சர் ஸ்டாலின்

Mon Jun 16 , 2025
திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் நீதியன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர். இந்தியாவில் சுயமரியாதை திருமணங்களை முதலில் அங்கீகரித்தது தமிழ்நாடு தான் என பெருமிதத்தோடு கூறினார். மேலும் […]
MK Stalin dmk

You May Like