இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவியும், முன்னாள் மாடலும் நடிகையுமான ஹசின் ஜஹான் மீதான வழக்கு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டம், முராராய் பகுதியில், ஹசின் ஜஹானும், அவரது மகளும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்டை வீட்டாருடன் நிலத்தகறாரு இருந்துள்ளது. ஹசின் ஜஹானும் அவரும் மகளும் சேர்ந்து எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில், ஹசின் ஜஹான், அவரது மகளுடன் சேர்ந்து, எங்கள் வீட்டை உடைத்தும்,கத்தியை காட்டி மிரட்டி உயிருக்கு ஆபத்தான முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்தனர். இதையடுத்து, IPC பிரிவு 307 (கொலை முயற்சி), 452 (வீட்டுக்குள் அத்துமீறுதல்), 506 (மிரட்டல்), 34 (ஒரே குற்றத்தில் பலர் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முராராய் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோரியுள்ளனர். சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், ஹசின் ஜஹானும், மற்றவர்களும் வாய்த்தகராறு செய்து, பின்னர் உடலை தள்ளுவது போன்ற வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஹசின் ஜஹான் பின்னணி: முகமது ஷமி கடந்த 2014ஆம் ஆண்டில் ஹசின் ஜஹான் (Hasin Jahan) என்ற முன்னாள் மாடல் அழகியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2015ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டில் இவரும் பிரிந்துவிட்டனர். குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றஞ்சாட்டுகளை கூறி ஹசின் ஜஹான் விவாகரத்து பெற்றார். சமீபத்தில் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சத்தை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Read more: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. இலவச விதைகள் வழங்கும் தமிழக அரசின் திட்டம்..!! உடனே இத செய்ங்க..