பாஜக உடன் ஒருபோதும் மதிமுக கூட்டணி வைக்காது என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்…
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல்வர் ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்தார்.. முதல்வரின் உடல்நலம் குறித்து அவர் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.. அவருடன் துரை வைகோ உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்துள்ளனர்.. முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் உடல்நலம் குறித்து பேசினேன்.. தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்து முதல்வர் என்னிடம் பேசினார்.. கவின் ஆணவக் கொலை செய்தி வந்த உடன், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.. ஆணவக் கொலை குறித்து கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.. உங்கள் அரசும் அதை பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்தேன்.
உங்கள் சுற்றுப்பயணத்தில் அலைகடல் போல மக்கள் வருவது, ஆதரவு காட்டுவதும், திராவிட மாடல் அரசுக்கு மக்கள் முழு ஆதரவை தருகிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது என்றும் அவரிடம் கூறினேன்.. எனவே ஸ்டாலின் தலைமையிலான அரசு, திராவிட மாடல் அரசு மிகப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று வரப்போகும் சட்டமன்ற தேர்தல் இருக்கும்.. இங்கு கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை.. திமுகவின் தனி அரசு தான் அமையும்.. முழு பெரும்பான்மை பெறுவார்கள் என்பதை கடந்த சில நாட்களாகவே சொல்லி வருகிறேன்.. ஆர்.எஸ்.எஸ்., பாஜகவும் இந்த பெரியார் மண்ணில் கால் பதிக்க முற்படுகிறார்கள்.. அதை தடுக்க வேண்டியது திராவிடர்களின் கடமை.. திமுக உடன் மதிமுக உடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு இது தான் அடிப்படை காரணம்..
அதே நிலைப்பாடு தான் இன்றும் தொடரும், நாளையும் தொடர்கிறது.. ஆனால் சிலர் அப்பட்டமான பொய்களை பரப்பி வருகின்றனர்.. மதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அபாண்டமான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.. நாங்கள் என்ன கேடு உங்களுக்கு செய்தோம்.. பாஜகவை தொடர்ந்து நான் விமர்சித்து வருகிறேன்.. அந்த நிலைப்பாட்டில் என்றைக்கும் மாற்றம் வராது.. எந்த சூழ்நிலையிலும் பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளுடன் மதிமுக கூட்டணி வைத்து கொள்ளாது என்பதை உறுதியாக பதிவு செய்கிறேன்.. மீண்டும் மீண்டும் இந்த பொய் செய்திகளை பரப்புவது பத்திரிகை தர்மத்திற்கு அழகா என்று அந்த ஏடுகளே முடிவு செய்யட்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : முதல்வர் ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு.. தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பதால் அரசியலில் பரபரப்பு..