மனிதன் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இல்லையென்றால் அது பற்றி நண்பர்களுடன் நாமே பேசியிருப்போம். இன்றளவும் ஆவி, பேய், பிசாசு என்ற வார்த்தைகளை கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கும். இதுதொடர்பான பல கதைகள் தலைமுறைகளை கடந்து தற்போதும் இருந்து வருகிறது.
இந்த சூழலில், பேய் ஓட்டுவதாக கூறி 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே உள்ள விராரில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் தெரிவித்த தகவல்படி, ”கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கோவிலில் 17 வயது சிறுமி பிரேம் பாட்டீல் என்பவரை சந்தித்துள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியுள்ளது. மேலும், பிரேம் சிறுமியிடம் தனக்கு சூனியம் தெரியும் என்றும் பேய், பிசாசுகளை விரட்டுவேன் என்றும் கூறி அவரை நம்ப வைத்துள்ளார்.
மேலும், தன்னை ஒரு மனித கடவுள் என்று கூறியுள்ளான். இதையும் அந்த சிறுமி நம்பியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரேம், சிறுமியிடம் “உனக்கு தீய ஆவி பிடித்துள்ளது.. அதை விரட்ட வேண்டும் என்றால், என்னுடன் நீ உடலுறவில் இருக்க வேண்டும்” என்று கூறி சிறுமிக்கு பயத்தை உண்டாக்கியுள்ளார்.
இதையடுத்து, ஜூலை 30ஆம் தேதி, பிரேம் மற்றும் அவரது நண்பர் கரண் ஆகியோர் சிறுமியை விரார் ராஜோடி கடற்கரைக்கு அருகில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை, இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்து வந்த சிறுமி நடந்ததை தனது தோழியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன அவர், உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், சிறுமியை பலாத்காரம் செய்த பிரேம் மற்றும் அவரது நண்பன் கரண் ஆகியோர் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். மேலும், குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொருவனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : அசிங்க அசிங்கமா பேசுனாரு..!! கமல் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..!! ஓபனாக பேசிய நடிகை அம்பிகா..!!