எந்த பாகுபாடும் இல்லை, யாரும் சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது: புதிய UGC விதிமுறைகள் குறித்து தர்மேந்திர பிரதான் விளக்கம்..!

dharmendra pradhan

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். “இந்த விதிமுறைகளில் எந்தவிதப் பாகுபாடும் இருக்காது. சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.


சமீபத்தில் UGC, “உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதிமுறைகள், 2026” (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய ஒழுங்குமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறைதீர்ப்பு அமைப்பை முறையாக உருவாக்கவும், பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவு வழங்கவும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டதாக UGC தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த புதிய விதிமுறைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, “சாதி அடிப்படையிலான பாகுபாடு” என்ற சொல்லை UGC எப்படி வரையறுத்துள்ளது என்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து, பொதுப்பிரிவு (General Category) சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்று டெல்லியில் உள்ள UGC தலைமையகத்தின் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். சமீப நாட்களில் பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் மாணவர் விடுதிகளில் ஏற்பட்ட பெரும் கலவரங்களைத் தொடர்ந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் ஒரு மூத்த அதிகாரியும், பாஜக இளைஞர் பிரிவு தலைவரும், இந்த கொள்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

UGC விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

UGC-ன் புதிய விதிகளின்படி, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் ஒரு “சம வாய்ப்பு மையம்” அமைக்க வேண்டும். இந்த மையம், சிவில் சமூக அமைப்புகள், போலீஸ், மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளூர் ஊடகங்கள் ஆகியவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மேலும், இந்த மையம் மாவட்ட மற்றும் மாநில சட்ட சேவை ஆணையங்களுடன் இணைந்து சட்ட உதவிகளை (legal aid) வழங்கவும் ஒருங்கிணைக்க வேண்டும். இந்த சம வாய்ப்பு மையம், அந்த நிறுவனத்தின் தலைவரால் அமைக்கப்படும். இதில் பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.. அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), எஸ்சி. எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் (PwDs), பெண்கள் இருக்க வேண்டும்..

UGC விதிமுறைகளின்படி, இந்த மையம் சமத்துவம் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி மற்றும் நிதி வழிகாட்டுதல் வழங்குதல், அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.

சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

UGC-ன் இந்த புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. எக்ஸ் தளத்தில் #ShameonUGC என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பல நெட்டிசன்கள் இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவு (General Category) மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் என விமர்சித்து வருகின்றனர்.

பயனர் ஒருவர் “ புதிய UGC ‘சமத்துவ’ விதிமுறைகள் 2026, பொதுப்பிரிவு மாணவர்களை — அவர்கள் ஒதுக்கீடு இல்லாத குடும்பங்களில் பிறந்ததற்காகவே — வளாகங்களில் வன்முறையாளர்களாக முத்திரை குத்துகிறது. சமத்துவக் குழுக்கள் எங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. பொய்யான புகார்களிலிருந்து எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. வளாகங்கள் சாதி மோதல்களாக மாறுகின்றன.

போதும்! ஒவ்வொரு பொதுப்பிரிவு குடும்பமும் இந்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இந்த விஷமமான சாதி அரசியலிலிருந்து தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை முதன்மைப்படுத்த வேண்டும். உயர் கல்விக்காக உங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புங்கள்.. அங்கே திறமைக்கு மதிப்பு இருக்கிறது, ஒதுக்கீடு அரசியலுக்கு அல்ல.” என்று தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

தசாங்க யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் நன்மைகள்; தொழில் மற்றும் வேலையில் எதிர்பாராத திருப்பம்!

Tue Jan 27 , 2026
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் நிலை மற்றும் பார்வை மாறும் போது ஒரு நபரின் வாழ்க்கையின் திசையும் மாறுகிறது. பிப்ரவரி மாதத்தில், கிரகங்களின் அரசனான சனியும், புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து, மிகவும் அரிதான ‘தசாங்க யோகத்தை’ உருவாக்குகின்றன. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படுகிறது, மேலும் இது குறிப்பாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்திற்கான கதவைத் திறக்கும். தசாங்க யோகத்தின் முக்கியத்துவம் சனி கர்ம காரகராக இருக்கும்போது, ​​புதன் […]
raja yogam 1

You May Like