நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரபலங்களிடையே தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் பெஞ்சமின், கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழகத்தின் முதல்வராக உருவெடுப்பார் என்பதில் தனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “விஜய் தொட்டதெல்லாம் வெற்றிதான். அவரது வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் அவர். நான் திருப்பாச்சி படத்தில் அவருடன் நடித்தபோது சுமார் 170 நாட்கள் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மிகவும் எளிமையான மனிதர். படப்பிடிப்பின்போது தன்னுடன் நடிக்கும் யாரையும் அவர் வேண்டாம் என்று சொன்னதே கிடையாது” என்று புகழ்ந்தார்.
மேலும், “ஒரு படம் வெளியானால் ரூ.500 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை வசூல் செய்யக்கூடிய மாபெரும் நடிகர், அந்தப் புகழையெல்லாம் விட்டுவிட்டுப் பொது சேவைக்காக வந்திருக்கிறார் என்றால், அது உண்மையில் மிகப்பெரிய விஷயம். சின்னக் குழந்தைகள் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சின்னக் குழந்தைகள் மனதில் இடம் பிடித்து முதல்வரானார். அதேபோல், நடிகர் விஜய் சின்னக் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார். எனவே, விஜய் நிச்சயமாகத் தமிழ்நாட்டை ஆள்வார். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Read More : அதிர்ச்சி ரிப்போர்ட்..!! இந்தியாவில் அசுத்தமான நகரங்களில் மதுரை முதலிடம்..!! அப்படினா சென்னை..?



