கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எவ்வளவோ நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். ஆனா நான்கரை ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநில அரசு செய்யாத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் முதல் மாநிலமாக முன்னேறி இருக்கிறோம்.. இதனால் தான் நமது திராவிட மாடல் அரசை பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது.. வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்..
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் பாஜகவிடம் அடிமை சாசன் எழுதிக் கொடுத்தார்.. இப்பவும் வாய் துடுக்குடன் பேசி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பே இல்லாமல், தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டிருக்கிறார். கொள்கை இல்லாமல், தொடை நடுங்கும் பழனிசாமியின் தரத்தை மக்கள் எடை போட்டு பார்ப்பார்கள் என்று நானும் விட்டுவிட்டேன்.. ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடகு வைத்து விட்டார்..
திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று சொன்னவர், அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார் அது தான் வெட்கக்கேடு.. அதிமுக தொடங்கப்பட்ட போது அண்ணாயிசம் என்று சொன்னார்கள்.. அதை இப்போது பழனிசாமி அடிமையிசம் என்று மாற்றி, அமித்ஷாவிடம் சரணடைந்துவிட்டார்.. முழுவதுமாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு என்பது பழனிசாமிக்கு பொருந்தும்.. நேற்று அமித்ஷா காலில் பின்னர் முகத்தை கர்சீப் எதற்கு என்று இபிஎஸ்ஸை பார்த்து கேட்கின்றனர்..
தனிநபர்கள் தோன்றுவார்கள் மறைவார்கள்.. கட்சிகள் வரும் போகும்.. ஆனால் தமிழ்நாட்டின் தனிப்பெருமை நிரந்தரமானது. நமது மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும்.. இந்த மண்ணை காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு தான் இருக்கு.. டெல்லி நம் மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.. இந்தி மொழியை திணிக்கிறார்கள், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுக்கிறார்கள்.. கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள்.. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்கிறார்கள்..
அந்நாளும் இந்நாளும் சரி எந்நாளுமே இங்கு அடக்குமுறைக்கு நோ எண்ட்ரி தான்.. ஆதிக்கத்திற்கு இங்கு நோ எண்ட்ரி தான்.. திணிப்புக்கு இங்கு நோ எண்ட்ரி தான்.. மொத்தத்தில் இங்கு பாஜகவுக்கு நோ எண்ட்ரி தான்.. இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு.. 3 முறை ஒன்றியத்தில் ஆட்சியமைத்தும் தமிழ்நாட்டில் மட்டும் உங்கள் மோடி மஸ்தான் வேலை பலக்கவில்லை..
இன்னுமா எங்களை பற்றி தெரியல.. தலைமுறை தலைமுறையா போராடி நாம் பெற்று தந்த உரிமைகளை நம் கண் முன்னே பறிபோவதை அனுமதிக்கலாமா? பாஜகவை இப்பவே நாம் தடுத்து நிறுத்தவில்லை எனில், அடுத்து மாநிலங்களே இருக்கக்கூடாது என்று நகர்வார்கள்.. ஒரு உரிமைப்போரை நடத்தி நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கு.. எல்லோரின் நலனை காக்க தொடர்ந்து உழைப்பேன்.. நமக்கு துணையாக அண்ணா, பெரியார், கலைஞரின் கொள்கை உணர்வு நம்மிடம் இருக்கு.. இது ஆட்சி அதிகாரத்திற்கான போரட்டம் இல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்டம். தமிழ் மண்ணிற்கான போராட்டம்.. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.. தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்.. “ என்று தெரிவித்தார்.