கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் இது குறித்து பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது “ கரூரில் நடந்ததை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்.. நாம் பார்த்த மாதிரி அவரும் பார்த்ததால் கருத்து சொல்கிறார்.. தவெகவினர் ஓடிவிட்டனர் என்று செந்தில்குமார் சொன்னது உண்மை தானே.. தவெக தலைவர் உள்ளிட்ட யாரும் மருத்துவமனைக்கும் செல்லவில்லை கரூரிலும் இல்லை என்பது உண்மை தானே..
கரூருக்கு வந்தால் கலவரம் வந்துவிடும் என்று விஜய் சொன்னாரா? விஜய் மூன்று நாள் கழித்து போட்ட வீடியோவில் அப்படி சொன்னாரா? எங்களை ஓடச் சொன்னது காவல்துறை தான் என்று விஜய் சொன்னாரா? ஆனால் ஆதவ் அர்ஜுனா சொல்கிறார்.. விஜய் சொல்லாத விஷயத்தை இவர்கள் சொல்கிறார் என்றால் அவர் காது குத்துகிறார் என்று அர்த்தம்.. கரூரில் கூடுதலாக எப்படி கூட்ட சேர்ந்தது என்ற இடத்திற்கு காவல்துறை வந்துவிட்டது.. அதனால் தான் நீங்கள் உச்சநீதிமன்றத்திற்கு பயந்து ஓடினீர்கள். திடீரென அந்த கூட்டம் இரட்டிப்பானது எப்படி? அவ்வளவு பெரிய நெரிசல் ஏற்பட அது தான் காரணம்? எதற்கு அவ்வளவு பேரை கூட்டி வந்தீர்கள்..
அப்ப ஷூட்டிங் எடுத்தீங்களா? 69 ட்ரோன் எங்கிருந்து வந்தது? எவ்வளவோ உண்மைகளை பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் வெளியே கொண்டு வந்தது.. ஆனால் இந்த வழக்கை சிபிஐ வசம் கொடுத்ததால் வழக்கு ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.. இது உண்மைக்கும் விசாரணைக்கும் பின்னடைவு..
எப்படி பார்த்தாலும் உண்மை வெளிவரும்.. யாராலும் அதை தடுக்க முடியாது.. விஜய் எல்லாம் தப்பிக்க முடியாது. ஆதவ் அர்ஜூனா எல்லாம் தப்பிக்க முடியாது.. கரூரில் நடந்த ஒவ்வொரு விஷயமும் தேர்தலுக்கு முன்பு வெளியே வரும்..
ஆனால் இந்த உத்தரவுக்கு பிறகு விஜய் மீண்டும் வெளியே வந்து பேசுவார்.. ஆனால் உண்மை மறையாது.. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மை தெரியவரும்.. விஜய் அவர்களே சிபிஐக்கு மாற்றினால் தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீங்க.. உண்மை என்பது வேறு.. அது பேசும்.. உண்மை பேசும் போது தான் உங்கள் அரசியல் வாழ்க்கை முடியும் போது தெரியும்.. உண்மையை உங்களால் எதுவும் செய்ய முடியாது விஜய்.. வார்த்தைகளால் நீங்கள் உண்மையை மூட முடியாது விஜய்.. உண்மை தான் வெளியே வரும். ” என்று தெரிவித்தார்..
Read More : Breaking : கரூர் வழக்கில் புது ட்விஸ்ட்.. ஒரு நபர் ஆணைய விசாரணை நிறுத்தி வைப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு!