இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை, போதுமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.. மத்திய அமைச்சர் உறுதி..!

hardeep singh puri

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன..


தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரவ தொடங்கியது..

இதனால் பீதியடைந்த பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்கள் குவிய தொடங்கினர்.. தங்கள் வாகனங்கள் முழுமையாக பெட்ரோல் நிரப்பியதுடன் சில இடங்களில் கேன்களிலும் பெட்ரோலை சேமித்து வைத்து சென்றதாக கூறப்படுகிறது.. இதனால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை காண முடிந்தது.. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கவலையில் மக்கள் உள்ளனர்..

இந்த நிலையில் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை, போதுமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தெரிவித்தார். இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோக நிலை பாதுகாப்பாக உள்ளது என்று கூறிய அவர், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், போலியான கதைகளை உருவாக்குவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினார்..

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர் “ நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இதுபோன்ற ஒரு தருணத்தை எதிர்கொண்டதில்லை. இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோக நிலை பாதுகாப்பானது, மேலும் பாதுகாப்பான அளவு ஹார்முஸ் வழங்கியிருக்கும் அளவை விட அதிகமாக உள்ளது. நெருக்கடிக்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே சென்றது. பிரதமரின் சிறந்த இராஜதந்திர தொடர்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு நன்றி, அதே காலகட்டத்தில் சீர்குலைந்த ஹார்முஸ் ஜலசந்தி வழங்கியிருக்கக்கூடியதை விட அதிகமான கச்சா எண்ணெய் அளவை இந்தியா பெற்றுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்..

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியா பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் “ ஹார்முஸ் அல்லாத கச்சா எண்ணெய் இறக்குமதியில் தோராயமாக 70 சதவீதமாக உயர்ந்துள்ளது, மோதல் தொடங்குவதற்கு முன்பு இது 55 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் மூலதனம் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் 27 நாடுகளிலிருந்து 40 நாடுகளிலிருந்து வளர்ந்தது.

தொடர்ச்சியான ஆண்டுகளில் நீடித்த கொள்கை மூலம் கட்டமைக்கப்பட்ட இந்த கட்டமைப்பு பன்முகப்படுத்தல், மற்ற நாடுகள் இல்லாமல் இருப்பதைக் காணும் விருப்பங்களை நமக்கு வழங்கியுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் அதிக திறன் பயன்பாட்டில் இயங்குகின்றன. பல சந்தர்ப்பங்களில், அவை 100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன,” என்று பூரி கூறினார்.

Read More : ஈரானுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர்..! எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை..!

RUPA

Next Post

தீவிரமடையும் போர்..! ஈரானின் முக்கிய தளபதி கொலை..! இஸ்ரேல் அறிவிப்பு..!

Thu Mar 12 , 2026
ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர படையின் ஏவுகணைப் பிரிவில் செயல்பாட்டுத் தளபதியாக இருந்த அபு தர் முகமதி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. இஸ்ரேல் ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஈரானிய ஆட்சிக்கும் இடையே அபு தர் முகமதி ஒரு முக்கிய தொடர்பு அதிகாரியாகக் கருதப்பட்டார்.. ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மூலோபாய திட்டமிடலை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ஆபரேஷன் நார்தர்ன் […]
iran israel attack

You May Like