“திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை, எல்லைக்கல் தான்..” அரசு தரப்பு வாதம்!

thiruparangunram madurai hc 1

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை, எல்லைக்கல் தான் என்று தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது..


அப்போது திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர்.. பின்னர் அரசு தரப்பு தன் வாதங்களை முன் வைத்தது.. அப்போது தமிழக அரசு தரப்பு ” உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தான் கார்த்திகை தீபத்திருநாளில் தீபம் ஏற்றப்படும்.. அந்த நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது.. ராம ராமக்குமார் என்ற தனிநபர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..

இது தனிநபரின் கோரிக்கை. அவரின் கோரிக்கை நிராகரிக்கபப்ட்டதால் அவர் நீதிமன்றத்தை அணுகினார்.. இது பொதுநல மனு அல்ல. தனிநபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு.. ஆனால் இது பொதுமன நல மனு போல் பாவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. தனி நபர் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியாது.. தேவஸ்தானம் சார்பில் தான் தீபம் ஏற்றப்பட வேண்டும்..

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை, எல்லைக்கல் தான்.. மனுதாரர் உள்நோக்கத்தோடு மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்து முன்னணி என்ன சொல்லியதோ அதையே மனுதாரர் ரவிக்குமார் மனுவாக தாக்கல் செய்துள்ளார். இந்து – இஸ்லாமியர் பிரச்சனை வரலாற்றுடன் தொடர்புடையது.. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே அரசு சில முடிவுகளை எடுக்க முடியும்.. மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும்.. மனு தாரர் தாக்கல் செய்துள்ள விவரங்களை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது..

தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக எப்படி 3 நாட்களில் முடிவெடுக்க முடியும்? தர்கா அருகே இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ள வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டது.. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது..

Read More : திடீர் திருப்பம்..!! சீமானுக்கு எதிராக களமிறங்குகிறார் காளியம்மாள்..!! 2026 தேர்தலில் போட்டி..!! வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!

English Summary

The Tamil Nadu government has informed the Madurai branch of the High Court that there is no lighthouse on the Thiruparankundram hill, but only a boundary stone.

RUPA

Next Post

ரூ. 5 ஆயிரம் சேமித்தால் ரூ. 8.5 லட்சம் சொந்தமாக்கிக் கொள்ளலாம்..! வட்டி மட்டும் இவ்வளவா..?

Fri Dec 12 , 2025
Rs. 5 thousand if you save Rs. 8.5 lakhs..! Is this the amount of interest only..?
small savings schemes

You May Like