கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்ட் பாதுகாப்பானது என்றும், அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் Serum Institute of India தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவை நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை மேற்கோளாக காட்டிய Serum Institute, தனது X பதிவில், “COVID-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்பதே பெரிய அளவிலான ஆய்வுகளின் முடிவாக உள்ளது. தடுப்பூசிகள் பாதுகாப்பானதும், அறிவியல் பூர்வமாக சோதிக்கப் பட்டதும் ஆகும்,” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், “மாரடைப்பு மரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் இடையே நேரடி தொடர்பு இல்லை” என உறுதி செய்துள்ளது. திடீர் மரணங்களுக்கு காரணமாக இருப்பவை என்ன என்பதை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
- வாழ்க்கை முறை (உடற்பயிற்சி குறைவு, புகைபிடிப்பு, மது பழக்கம்)
- முன்னே இருந்த நோய்கள் (உயர் அழுத்தம், இரத்த சர்க்கரை)
- கோவிட் பிந்தைய உள் உறுப்பு பாதிப்பு ஆகியவை, இளைஞர்களில் மாரடைப்புகளுக்கு முக்கிய காரணிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR மற்றும் AIIMS ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின்படி, கோவிட்-19 தடுப்பூசிகள் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகித்துள்ளன. அதே நேரத்தில், அதனால் ஏற்படும் தீவிர பக்கவிளைவுகள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன.
Read more: அஜித்குமார் மரணம்: “விவரம் அறிந்தவர்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்கலாம்..!” – வழக்கறிஞர்