கரூரில் தவெக தலைவர் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. சிலர் காவல்துறை பாதுகாப்பு தரவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.. இன்னும் சிலர் இதை அரசியலாக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்..
அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருது தரலாம் எனவும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு வராத கண்ணீர் கரூரில் சிந்தியது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்திருந்தார்..
இந்த நிலையில் அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : Flash: கரூரில் நடந்தது என்ன..? NDA சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைத்தார் ஜெ.பி. நட்டா..!!